தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவர்கள் அலட்சியம்? அறுவை சிகிச்சையின் போது சிறுவன் பலி

14 Jul 2026, 10:39 pm
மருத்துவர்கள் அலட்சியம்? அறுவை சிகிச்சையின் போது சிறுவன் பலி

மருத்துவர்கள் அலட்சியம்? அறுவை சிகிச்சையின் போது சிறுவன் பலி

திருப்பூர், ஜூலை 14 - திருப்பூரில் அரசு மருத் துவமனையில் தொண்டை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 11 வயது பள்ளி மாணவர் உயிரிழந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத் துவர்களின் அலட்சியத்தின் கார ணமாகவே தங்களது மகன் உயிரி ழந்து விட்டதாக, மருத்துவர்கள் மீது பெற்றோர் மற்றும் உறவினர் கள் குற்றம் சாட்டினர். திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் பிர சாந்த். இவரது மனைவி பூஜா. பனி யன் தொழிலாளர்களான இந்த தம் பதிக்கு ஹரிஷ் (11) என்ற மகனும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சிறுவன் ஹரிஷ் அங்குள்ள அரசுப் பள்ளி யில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் ஹரிஷ்க்கு கடந்த சில வாரங்களாகத் தொடர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இத னால் பெற்றோர்கள், சிறுவனை சிகிச்சைக்காக அருகில் உள்ள 15-வேலம்பாளையம் அரசு மருத் துவமனைக்கு அழைத்துச் சென்ற னர். அங்கு சிறுவனைப் பரிசோ தித்த மருத்துவர்கள், அவனுக்கு தொண்டையில் சதை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து சதையை அகற் றினால் பிரச்சனை சரி யாகி விடும் என்றும் கூறி யுள்ளனர். மருத்துவர் களின் அறிவுறுத்தல்படி, சதை வளர்ச்சியை நீக்கும் அறுவை சிகிச்சைக்காக சிறுவன் ஹரிஷ் ஞாயிறன்று 15-வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டான். திங்களன்று மருத்துவமனையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவை சிகிச்சை நடந்து கொண்டி ருந்தபோதே, எதிர்பாராத வித மாக சிறுவனுக்குத் திடீரென கடு மையான உடல்நலக்குறைவு ஏற் பட்டு, நிலைமை மோசமடைந் துள்ளது. இதனால் பதறியடித்த மருத்து வர்கள், மேல் சிகிச்சைக்காக சிறு வனை ஆம்புலன்ஸ் மூலம் திருப் பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்கு முன்னதாக வ.உ.சி.நக ரில் உள்ள ரேவதி மருத்துவமனை யின் ஆம்புலன்ஸ் மூலம், ரேவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இம்மருத்துவம னையில் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அனுமதிக்கப்பட்டிருந் தார். பின்னர், சிறுவன் ஹரிஷை, அங்கிருந்து அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரி சோதித்த அவசரப் பிரிவு மருத்து வர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற் றோர் பிரசாந்த் - பூஜா மற்றும் உற வினர்கள், ஹரிஷின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் குடும்பத்தினர் கூறும்போது, அறுவை சிகிச்சை செய்த மருத்து வர் மற்றும் மயக்க மருந்து மருத்து வர் ஆகியோரின் கவனக்குறைவு காரணமாகவே தங்கள் மகன் உயிரிழந்து விட்டான் என்று கண் ணீர் மல்க குற்றம் சாட்டினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த 15-வேலம் பாளையம் காவலர்கள், சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி னர்.

மருத்துவமனை முன்பு அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மாணவர் ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வேலம் பாளையம் அரசு மருத்துவமனை அருகில் அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் வேலம்பாளையம் நகரச் செயலா ளர் ச.நந்தகோபால், அதிமுக மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், தேமுதிக லோகநாதன், மதிமுக பூபதி, மக்கள் அதிகாரம் கார்த்தி, நவீன மனிதர்கள் பாரதி சுப்ப ராயன் ஆகியோர் உரையாற்றி னர். இதில், அரசுப் பள்ளி மாண வன் ஹரிஷூக்கு மரணம் ஏற்ப டுத்திய அறுவை சிகிச்சை குறித்து மருத்துவத் துறையின் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். மாநில அரசு, பாதிக் கப்பட்ட மாணவன் குடும்பத் துக்கு உரிய நீதியும், நிவாரண மும் வழங்க வேண்டும். வேலம் பாளையம் அரசு மருத்துவமனை யில் முழுமையான வசதிகளை செயல்படுத்த, மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. முடி வில் தபெதிக நிர்வாகி சண். முத்துக்குமார் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.