கூட்டு செயல்பாட்டால் செழுமையடையும் திருப்பூர் புத்தகத் திருவிழா!
9 Feb 2026, 3:02 pm
<p><strong>கூட்டு செயல்பாட்டால் செழுமையடையும் திருப்பூர் புத்தகத் திருவிழா!</strong></p>
<p>திருப்பூர், பிப்.9- பலரது கூட்டு செயல்பாடும், அர்ப்பணிப்பு உணர்வுமே திருப்பூர் புத்தகத் திருவிழாவை ஆண்டுதோறும் செழுமைப்படுத்தி வருகிறது. இது இப் போது ‘திருப்பூர் மக்களின் திருவிழா வாக’ முத்திரை பதித்திருப்பதாக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்றவர் கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 22 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா நன்றி அறிவிப்புக் கூட்டம் ஞாயி றன்று மாலை கே.ஆர்.சி. சிட்டி சென் டரில் நடைபெற்றது. கிட்ஸ் கிளப் கல்வி நிறுவனங்கள் தலைவர் மோகன் கார்த் திக் தலைமை வகித்தார். பிரஸ் குமார சாமி முன்னிலை வகித்தார். பின்னல் புத்தகாலயம் பா.சௌந்தரபாண்டியன் வரவேற்றார். இதில் புத்தகத் திருவிழா நடத்தியதன் அனுபவங்கள் குறித்து புத்தகத் திருவிழா குழுவில் பணியாற் றிய மு.திருப்பதி, சதீஷ்குமார், டி.எம்.எல்.ஆறுமுகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் எஸ்.சுப்பிரமணியன், ஆர்.ஈஸ் வரன், அ.நிசார் அகமது ஆகியோர் உரையாற்றினர். இவர்கள் பேசும் போது, இந்தாண்டு கண்காட்சியை காண்பதற்கு மாணவி கள், இளைஞர்கள் அதிகம் வந்தனர். இதைப் பற்றி முதியவர் ஒருவர் கூறு கையில், புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருவதன் விளைச்சல் இது. சிறுவர்களாக, பள்ளி மாணவர்களாக புத்தகத் திருவிழா திறனாய்வு போட்டி களில் பங்கேற்றோர் இப்போது இளை ஞர்களாக கண்காட்சிக்கு வருகின்ற னர். இது திருப்பூர் புத்தகத் திருவி ழாவை தொடர்ந்து தொய்வின்றி நடத்தி யதன் விளைச்சல் என்று பெருமிதத்து டன் குறிப்பிட்டனர். புத்தகத் திருவிழா நடத்துவது சாதாரணமான வேலை அல்ல. இதில் மொத்தம் 298 வேலை கள் உள்ளன. இவற்றை குழுக்களாக பலர் இணைந்து நடத்திக் காட்டி வரு கின்றனர். தொடக்கத்தில் திருப்பூர் புத்தகத் திருவிழாவை பின்னல் புக் டிரஸ்ட் தனித்து நடத்தி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்தி வருகிறது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களி டம் ஏன் கொடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அரசு நிர்வாகம் பின்னல் குழுவின் பணிகளைப் பாராட் டியுள்ளது. புத்தகத் திருவிழா குழுவின ரின் கூட்டு செயல்பாடு, அனைவ ரிடமும் கலந்த ஆலோசனை செய்து கூட்டு முடிவு எடுத்து அமல்படுத்துவது, அர்ப்பணிப்பு ஆகியவற்றை கவனித்த அரசு துறை அதிகாரிகள் தற்போது, இது உங்களால் தான் முடியும்!, என்று பாராட்டுகின்றனர். சமுதாயத்தின் அனைத்து தரப்பி னரிடமும் வாசிப்பு பழக்கம் பற்றிப் பரவ வேண்டும், கல்வி அறிவு, பாடப்புத்த கத்தைத் தாண்டி பெரிய உலகம் இருக் கிறது என்ற புரிதலை இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும். என்பதற்காக, சமுதாய நோக்கத்தோடு நாம் இதை நடத்தி வருகிறோம் என்று நோக்கத்தை கூறினர். புத்தகத் திருவிழாவின் அனுபவங்க ளில் சில பலவீனங்களையும் களைய வேண்டிய தேவையை உணர்த்தினர். புத்தகத் திருவிழா நடைபெறும் பகு திக்கு அருகாமையில் இருக்கும் கல் லூரி, பள்ளி மாணவர்கள் இக்கண்காட் சியைக் காண வருவதில்லை. அதே போல் திருப்பூர் முழுவதும் முக்கிய மான 50 குடியிருப்புகளில், வசிப்ப வர்களிடம் இன்னும் இது போய்ச் சேர வில்லை. எதிர் காலத்தில் இன்னும் பல குடியிருப்புகள், ஏராளமான மக்களி டம் புத்தகத் திருவிழாவைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதன் நோக்கம் பெரிது, இன்னும் சிறப்பாக மகத்தான வெற்றி பெற வேண்டும். அரசு நிர்வாகம் கண்காட்சி நடத்து வதற்கு நிரந்தர அரங்கம் அமைத்து தர வேண்டும், திருப்பூருக்கு அருகாமை யில் இருக்கும் கொடுமணல் தொல்லி யல் ஆய்வு குறித்து இளம் தலைமுறை யினர் தெரிந்து கொள்ள கொடுமணல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தெரிவித்தனர். ஆரம்பத்தில் பார்வையாளர்களாக இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் செயற் பாட்டாளர்களாக மாறி முன்னணி நிலைக்கு வந்திருக்கின்றனர். கூட்டுச் செயல்பாட்டின் விளைவு தான் இது. புத்தகத் திருவிழாவுக்கு வரும் பதிப் பகத்தார், விற்பனையாளர்களிடம், அடுத்த முறை இங்கு வருவீர்களா? என்று கேட்டபோது, வேறெங்கும் இல்லாத, இங்கிருக்கும் விருந்தோம் பல் சிறப்பு எங்களை ஈர்க்கிறது. புத்தக விற்பனைக்காக இல்லாவிட்டாலும், நிச்சயம் இந்த விருந்தோம்பலுக்கா கவே வருவோம் என்று கூறுவதை கேட்க மகிழ்ச்சியளிக்கிறது. அது போல் இத் திருவிழா உள்ளூரில் எழுத்தாளர், பேச் சாளர் என பல திறமையாளர்களை உரு வாக்கியுள்ளது. திருப்பூரின் அடையா ளம் என புத்தகத் திருவிழா முத்திரை பதித்திருக்கிறது. தற்போது நடைபெறு வது வெறும் நன்றி அறிவிக்கும் நிகழ்வு அல்ல. நடத்திய புத்தகத் திருவிழாவை குறித்து ஆலோசனை, கருத்துகளை பரிசீலித்து அடுத்த முறை மேலும் சிறப் பாக அமலாக்குவதற்காகத்தான். கட்ட மைப்புடன், தன்னியல்பாக இயங்கக் கூடிய உயிரோட்டமான அமைப்பாக இது உயர வேண்டிய தேவை இருக் கிறது. இன்னும் செழுமையாக, சிறப் பாக, நேர்த்தியாக புத்தகத் திரு விழாவை நடத்துவோம் என்று தெரி வித்தனர். இதில் பின்னல் புக் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே.காமராஜ் உட் பட சுமார் நூறு பேர் கலந்து கொண் டனர்.</p>
