தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.24இல் தொடக்கம் மைதானத்தில் ஆயத்தப் பணிகள் ஆரம்பம்

1 Jan 2026, 4:14 pm
திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.24இல் தொடக்கம் மைதானத்தில் ஆயத்தப் பணிகள் ஆரம்பம்
<p>திருப்பூர், ஜன.1- தமிழ்நாடு அரசு, திருப்பூர் &nbsp;மாவட்ட நிர்வாகம் மற்றும் &nbsp;திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் &nbsp;இணைந்து நடத்தும் திருப்பூர் &nbsp;புத்தகத் திருவிழா தொடங் கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் புத்தகத் திரு விழா நடைபெறும் மைதானத்தில் தற்போது &nbsp;சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின் றன. 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி முதல் &nbsp;பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடத்த தீர் மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த &nbsp;புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் கணிச மான புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனை யாளர்கள் இதற்கு முன்பு நடைபெறும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் பங்கேற் கின்றனர். சென்னை புத்தகத் திருவிழா ஜன வரி 21ஆம் தேதி நிறைவடைகிறது. அது முடிந்த அடுத்த நாளே திருப்பூர் புத்தகத் திரு விழாவில் புத்தகங்களை கொண்டு வந்து &nbsp;வைப்பதில் நடைமுறைச் சிரமம் இருப்பதாக வும், எனவே சில தினங்கள் திருப்பூர் புத்தகத் &nbsp;திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும் என &nbsp;கோரிக்கை விடுத்தனர். இதன் மீது புத்தகத் திருவிழா ஏற்பாட்டா ளர்கள் கலந்தாலோசனை செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் இசைவைப் பெற்று தேதி மாற்றம் செய்தனர். அதன்படி ஜனவரி &nbsp;24ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழா தொடங்குகிறது. பிப்ரவரி 3ஆம் தேதி நிறை வடைகிறது. திருப்பூர் புத்தகத் திருவிழா திருப்பூர் &nbsp;காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதே மைதானத் தில் இந்த ஆண்டும் புத்தகத் திருவிழா &nbsp;நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் &nbsp;தற்போது சீரமைப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்று பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.