தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாட்டிறைச்சி, பிரியாணி விற்பனை இரண்டு நாள் நிறுத்தம்

17 Jun 2026, 12:25 am
மாட்டிறைச்சி, பிரியாணி விற்பனை இரண்டு நாள் நிறுத்தம்
<p><strong>மாட்டிறைச்சி, பிரியாணி விற்பனை இரண்டு நாள் நிறுத்தம்</strong></p><p>​​​​​​​திருப்பூர், ஜூன் 16- மாடுகள் விலை உயர்ந்திருக்கும் நிலையில் மாட்டு இறைச்சிக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என்று கூறி, திருப்பூரில் மாட்டு இறைச்சி மற்றும் பீப் பிரியாணி விற்பனையை இரண்டு நாட்கள் நிறுத்தி விட்டனர். அசைவ உணவுகளில் ஒன்றான மாட்டிறைச்சியை கணிச மான மக்கள் விரும்பி உண்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு மாடுகள் கேரளாவுக்கு அனுப்பப்படும் நிலை யில் இறைச்சிக்கான மாடுகளின் விலை அதிகரித்து உள்ளது. ஒரு மாட்டின் விலை ரூ.5000 முதல் 10 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு மாட்டிறைச்சி கிலோவுக்கு ரூ.50 முதல் 100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எலும்பு கறி கிலோ ரூ.400, எலும்பில்லா இறைச்சி ரூ.500 என உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. மாடுகள் விலை உயர்ந்த நிலையில் கேரளாவுக்கு வழக்க மாக அதிக அளவில் மாடுகள் அனுப்பப்படுகின்றன. அதேசம யம் ஆந்திராவில் இருந்து இங்கு மாடுகள் கொண்டு வருவது குறைந்திருக்கிறது. மேலும் மாட்டு தோல் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளால், மாட்டி றைச்சி விற்பனையில் கட்டுபடியான விலை கிடைக்க வில்லை. எனவே மாட்டு இறைச்சி விலை உயர்ந்திருப்பது மற்றும் தங்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது பற்றி திருப்பூரில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கடந்த ஞாயிறன்று கலந்த ஆலோசனை மேற்கொண்டனர்.. இதில் விலை உயர்வு பிரச்சனையை முன்வைத்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் மாட்டிறைச்சி விற்ப னையை நிறுத்துவது என்று முடிவு செய்தனர். இதன்தொடர்ச்சியாக, திருப்பூர் நொய்யல் வீதியில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி வியாபாரிகள் பாதுகாப்பு நல சங்கம் சார்பாக அனைத்து மாட்டிறைச்சி கடைகளுக்கும் என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், மங்கலம் உள்ளிட்ட இந்த வட்டாரத்தில் முக்கிய மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக மாட்டு இறைச்சி விற்பனையில் ஈடுபடவில்லை. இவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாட்டு இறைச்சி பிரியாணி விற்ப னையையும் பிரியாணி விற்பனையாளர்கள் இந்த இரண்டு நாட்கள் மேற்கொள்ளவில்லை. பிரியாணி கடைகளில் கோழி இறைச்சி பிரியாணி வழக்கம் போல் விற்பனை செய்யப்பட் டது. திருப்பூர் வட்டாரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 2 முதல் 4 டன் மாட்டிறைச்சி விற்பனை நடைபெறும். இரண்டு நாட்கள் விற்பனை நிறுத்தம் காரணமாக அதிகபட்சம் 8 டன் மாட்டு இறைச்சி விற்பனை நடைபெறவில்லை என்றும் வியா பாரிகள் தெரிவித்தனர். அதேபோல் மாட்டு இறைச்சி விற்ப னையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 30க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி பிரியாணி கடைகளிலும் இந்த இரு நாட்களும் விற்பனை நடைபெறவில்லை. இரண்டு நாட்கள் விற்பனை நிறுத்தம் நடத்தப்பட்ட நிலையில் புதன்கிழமை வழக்கம்போல் மாட்டிறைச்சி கடைகள் செயல்படும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் செயல்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.