தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் பனியன் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது

21 Nov 2025, 5:11 pm
திருப்பூர் பனியன் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது
<p><strong>திருப்பூர் பனியன் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது</strong></p> <p>திருப்பூர், நவ.21- பனியன் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் செப்டம்பர் 2025இல் முடிவடைந்தது. இதையொட்டி தொழிற்சங்கங்கங்களின் கோரிக் கையை அடுத்து, நவ.4 ஆம் தேதி &nbsp;தொழிற்முனைவோர் சங்கங்க ளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த் தையில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, வியாழனன்று தொழில் முனைவோர் &nbsp;சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்க ளுக்கும் இடையே ஊதிய ஒப்பந்தப் &nbsp;பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில், கூட்டு கமிட்டியின் தலை வர் கே.எம்.சுப்பிரமணியன் பேசுகை யில், 1980களில் ஒரு கோடி ஏற்றுமதி &nbsp;செய்துவந்துள்ள திருப்பூர் நகரம், தற்பொழுது ரூ.45 ஆயிரம் கோடி &nbsp;ஏற்றுமதி செய்கிற அளவு உயர்ந்துள் ளது. இதற்கு முக்கிய காரணம் தொழில் முனைவோர் மட்டுமல்ல, தொழிற்சங்கங்களும் அதைச் சார்ந்த &nbsp;தொழிலாளர்களின் ஒத்துழைப்புமே ஆகும் என்று கூறினார். இக்கூட்டத்தில் பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்க தலை வர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் &nbsp;ஏற்றுமதியாளர்கள் சங்க இணை &nbsp;செயலாளர் குமார் துரைசாமி, தென் னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தாமோதரன், தென்னிந்திய இறக்குமதி இயந்திர &nbsp;பின்னலாடை துணி உற்பத்தியாளர் கள் சங்க தலைவர் என்.விவேகாநந் தன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை &nbsp;உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பி. கிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியா ளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க &nbsp;தலைவர் எம்.பி.முத்துரத்தினம் ஆகி யோர் அமெரிக்க வரி விதிப்பால் தற்பொழுது நிலவக்கூடிய திருப்பூர் தொழில் பாதிப்பை பற்றியும். பங்க ளாதேஷ் இறக்குமதி மற்றும் பல &nbsp;பிரச்சனைகள் உள்ளதையும் குறிப் பிட்டு தொழிற்சங்கங்கள் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்று &nbsp;கேட்டுக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பனியன் மற்றும் &nbsp;பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சிஐடியு பொது செயலாளர் ஜி.சம்பத், &nbsp;பனியன் பாக்டரி லேபர் யூனியன் (AITUC). பொது செயலாளர் என்.சேகர், பனியன் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் க.ராம கிருஷ்ணன், பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் &nbsp;எம்.மனோகரன், தமிழ்நாடு தேசிய &nbsp;பனியன், ஜின்னிங் பொதுத் தொழி லாளர் சங்கத்தின் செயலாளர் வி. ஆர்.ஈஸ்வரன், அண்ணா தொழிற் சங்க பேரவை மாவட்டச் செயலா ளர் சி.எஸ்.கண்ணபிரான், பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தலைவர் பாண்டியன், பாரதிய பனி யன் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாதவன், திருப்பூர் மாவட்ட பனியன் ஜவுளி &nbsp;நூற்பாலை மற்றும் பொது தொழிலா ளார் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் முத்துசாமி ஆகியோர் ஒருமித்த &nbsp;கருத்தாக அத்தியாவசிய பொருட்க ளின் விலைவாசி உயர்வை குறிப் பிட்டு தொழிலாளர் நலனை கருத்தில் &nbsp;கொண்டு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை &nbsp;விடுத்தனர். கூட்டு கமிட்டியின் தலைவர் கே. எம்.சுப்பிரமணியன் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து &nbsp;கூட்டு கோரிக்கை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுகொண்டார். அடுத்ததாக கூட்டு கமிட்டியின் இரண்டாவது கூட்டம் டிச.5 ஆம் தேதி 4.30 மணியளவில் நடத்த திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.