தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் பனியன் ஆலைகளுக்கு நேரில் சென்று தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த பிரச்சாரம்

5 Feb 2026, 3:40 pm
திருப்பூர் பனியன் ஆலைகளுக்கு நேரில் சென்று தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த பிரச்சாரம்
<p><strong>திருப்பூர் பனியன் ஆலைகளுக்கு நேரில் சென்று தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த பிரச்சாரம்</strong></p> <p>திருப்பூர், பிப்.5 திருப்பூர் பனியன் ஆலைகளுக்கு நேரில் சென்று அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களிடம் பிப்ரவரி 12 வேலைநிறுத்த போராட் டத்தைப் பற்றி துண்டறிக்கை கொடுத்து &nbsp;பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் &nbsp;விரோத நான்கு சட்டத் தொகுப்பு களை கண்டித்தும், பொதுத்துறை நிறு வனங்களை விற்பனை செய்வது, மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைத்தது உள்ளிட்ட தேச விரோத கொள்கைகளை எதிர்த்து &nbsp;பிப்ரவரி 12ஆம் தேதி மத்திய தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய வேலை &nbsp;நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள் ளன. &nbsp;இந்த போராட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்து வதற்காக சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், &nbsp;ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, யுடி யுசி உள்ளிட்ட &nbsp;மத்திய சங்கங்களின் &nbsp;நிர்வாகிகள் கடந்த புதன், வியாழன் &nbsp;இரு நாட்கள் பனியன் தொழிற்சாலைக ளுக்கு நேரில் சென்று அங்கு பணி யாற்றும் தொழிலாளர்களை சந்தித்து &nbsp;வேலை நிறுத்தம் குறித்து துண்ட றிக்கை கொடுத்து வேலை நிறுத்தத் தில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்ட னர். திருப்பூர் மாநகரம் மற்றும் புதுத் &nbsp;திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் &nbsp;பல ஆயிரம் தொழிலாளர்களை சந்தித்து வேலை நிறுத்தப் போராட் டத்தை விளக்கி ஆதரவு திரட்டியதாக சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் தெரி வித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.