ஒளிராத உயர் கோபுரம் மின் விளக்கும் இருள் சூழ்ந்த அவிநாசி சாலையும்
4 Jun 2026, 10:41 pm
<p>திருப்பூர், ஜூன் 4 -</p><p>திருப்பூர் அவிநாசி சாலையில் ராம் நகர் ஒரு வழிப்பாதை சந்திப்பு அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த பல நாட்களாக எரியாமல் இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி மிக்க இந்த பகுதி மாலை வேலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.</p><p>திருப்பூர் அவிநாசி சாலையில், ஓடக்காடு வீதி மற்றும் ராம் நகர் ஒருவழிப் பாதை சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இது கடந்த பல நாட்களாக ஒளிராமல் பழுதடைந்து இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள இந்த இடத்தில் இந்த கோபுர விளக்கு ஒளிராததால் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் விரைந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே இந்த உயர்மின் கோபுர விளக்கை சீர் செய்து, ஒளிர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி இப்பகுதி தொழில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>
