முந்தய பக்கம்

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு

30 May 2026, 11:44 pm
சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு
<p><strong>சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு</strong></p><p>திருப்பூர், மே 30- திருப்பூரில் சாலையில் கிடந்த பணத்தை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தானா ராம் என்பவர், திருப்பூர் வளம் சாலையில் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து ரூ.5 லட்சத்து 64 ஆயிரத்தை எடுத்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று, பின்னர் வங்கியில் செலுத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். கடைக்கு வந்து தனது இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் வைத்திருந்த பையை பார்க்கும் பொழுது, கைப்பை அறுந்து விழுந்துள்ளது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் மதன் என்பவர் தனது உறவினருடன் வளம் சாலையில் வரும் பொழுது, கீழே கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. அதைத்தொடர்ந்து மதன் பணப்பையை எடுத்து கொண்டு திருப்பூர் தெற்கு காவல் நிலையம் வந்து காவல் ஆய்வாள ரிடம் நடந்தவற்றை கூறி பணத்தை ஒப்படைத்தார். இதைய டுத்து அவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram