தனியார் மருத்துவமனை - 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரகசிய தொடர்பு? நடவடிக்கை எடுக்க கோரிக்கை
5 Nov 2026, 12:29 am

தனியார் மருத்துவமனை - 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரகசிய தொடர்பு? நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், நவ.4-திருப்பூர் மாவட்டத்தில் சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் கூட்டு சேர்ந்துகொண்டு எந்த பகுதியில் விபத்துநடந்தாலும் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொண்டு வர வைத்து, கமிஷன் கொடுத்த அதிர்ச்சித் தகவல்வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நல முன்னேற்றசங்கம் ஆதாரங்களுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது. அரசின்’இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் விபத்துநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திட்டமிட்டே நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆம்புலன்ஸ் மூலம்அழைத்துச் செல்லப்பட்ட 21 விபத்து நோயாளிகளில், 15 பேர் (71%-க்கும் மேல்) திருப்பூர் போயம்பாளையம் பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மட்டுமே கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வாவிபாளையம்,தோட்டத்துப்பாளையம், வெங்கமேடு, எம்எஸ் நகர், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், வள்ளிபுரம் உள்ளிட்ட திருப்பூரின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற விபத்துகளில் சிக்கியவர்களை குறிப்பிட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் நேரடியாக இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கமிஷன் பெறுவதற்கான ஏற்பாடு என்று நுகர்வோர் நல முன்னேற்றசங்க தலைவர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இலவச சிகிச்சை தராமல் நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் திருப்பூரிலுள்ள இது போன்ற சில மருத்துவமனைகளின்அங்கீகாரத்தை அரசுரத்து செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் ஈ.பி.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம் மாவட்ட ஆட்சியருக்கு சரவணன் அளித்த புகார் குறித்து திருப்பூர் மாவட்ட நலப் பணிகள் இயக்குநர் மருத்துவர் பா.ராதிகா பதில் அளித்துள்ளார். இதில் விபத்து நடைபெற்ற இடம்,நோயாளியின் மருத்துவ நிலை மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி, விபத்தில் சிக்கியவர், அருகிலுள்ள மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என்று இயக்குநர் பா.ராதிகா தெரிவித்துள்ளார். மேலும் என்.கே.48 திட்டத்தின் கீழ் மருத்துவமனை அனுமதி நடைமுறை மாவட்ட மேலாளர் அளவில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எனினும் பல்வேறு கண்காணிப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் தனியார் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுடன் ரகசிய தொடர்பு வைத்து, விபத்தில் சிக்கும் நோயாளிகளை தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வர

செய்கின்றனர். இதன் மூலம் நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணத்தைபறிக்கின்றனர்.

இப்பிரச்சனை நீண்ட காலமாகவே திருப்பூரில் நடைபெற்று வருவதாக நுகர்வோர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே விபத்துநோயாளிகளை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ரகசிய தொடர்பு குறித்து விரிவானவிசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்துகின்றனர்.