தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பத்தூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவி பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை!

9 May 2026, 2:36 am
திருப்பத்தூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவி பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை!
<p><strong>திருப்பத்தூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவி பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை!</strong></p><p>திருப்பத்தூர், மே 8- திருப்பத்தூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்துப் பெரும் சாதனை படைத்துள்ளது. வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளின்படி, இப்பள்ளியில் பயின்ற மாணவி R. ஜோதிகா 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று, திருப்பத்தூர் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்துச் சாதனை புரிந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, மாணவர் R. அஸ்வின் 594 மதிப்பெண்களும், மாணவி S. ரூபிக்கா 592 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைப் பாராட்டி, பள்ளியின் தாளாளர் S. கூத்தரசன் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த விழாவில் வேளாங்கண்ணி பள்ளி குழுமத்தின் முதல்வர்கள் பூங்காவனம், ராஜேந்திரன், சிவா, மெரினா, ஜலஜாக்ச்சி, மேல்நிலைப்பள்ளிப் பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் ஆசிரியர்கள், திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.