முந்தய பக்கம்

கோவில் இடத்தை போலி பட்டா மூலம் விற்க முயற்சி: பொதுமக்கள் முற்றுகை

17 Jun 2026, 11:23 pm
கோவில் இடத்தை போலி பட்டா மூலம் விற்க முயற்சி: பொதுமக்கள் முற்றுகை
<p><strong>கோவில் இடத்தை போலி பட்டா மூலம் விற்க முயற்சி: பொதுமக்கள் முற்றுகை</strong></p><p>திருப்பத்தூர், ஜூன் 17- திருப்பத்தூர் அடுத்த பாவூச நகர் பகுதி யில் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான பொது இடத்தை போலி பட்டா தயாரித்து விற்க முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் கடந்த 1897-ஆம் ஆண்டு முதல் 3 ஏக்கர் 32 சென்ட் பரப்பளவில் காளி யம்மன் கோவில் இடம் உள்ளது. இந்த இடத்தை திருப்பத்தூரைச் சேர்ந்த புத்தூர் மணி என்பவர் போலி பட்டா மூலம் மற்றவர்களுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆக்கிரமிப்புக்கு பயன்படு த்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், போலி பட்டா தயாரித்து மோசடியில் ஈடுபட்ட புத்தூர் மணி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram