கழிவறை, குடிநீர் வசதி கோரி பள்ளி மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம்
5 Jun 2026, 4:01 am

கழிவறை, குடிநீர் வசதி கோரி பள்ளி மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம்

திருப்பத்தூர், ஜூன் 4-

திருப்பத்தூர் திருமால்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததைக் கண்டித்து, பள்ளி திறந்த முதல் நாளான இன்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

143 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளி யில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழைய கழிவறை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது. இதற்கிடையே, தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் நவீன கழிவறையும் தேர்தல் முடிந்த கையோடு திடீரென எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர்கள், இன்று பள்ளிக்கு வந்த தங்களது பிள்ளைகளை வகுப்பறைக்கு அனுப்பாமல் வளாகத்திற்கு வெளியே அமர வைத்துப் போராடினர். உடனடியாகக் குடிநீர் மற்றும் தற்காலிகக் கழிவறை வசதி செய்ய வேண்டும், புதிய கட்டிடப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பினர்.