மருத்துவ சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்!
31 May 2026, 11:20 pm
<p><strong>மருத்துவ சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்!</strong></p><p>திருப்பத்தூர், மே 31- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு குனிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்கள் தினமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகாக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதேப்பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் சனிக்கிழமையன்று விவசாய நிலத்திற்கு சென்று உள்ளார். அங்கு பணியில் இருந்தபோது அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது். இதைத் தொடர்ந்து விவசாயி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள் ளார். அப்போது அங்கு பணியில் மருத்துவர் இல்லாததால் தூய்மை பணியாளர் ஒருவர் விவசாயியின் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். மேலும் விவசாயிக்கு தூய்மை பணி யாளர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>
