முந்தய பக்கம்

திருப்பத்தூரில் ரயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

17 Jun 2026, 11:23 pm
திருப்பத்தூரில் ரயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருப்பத்தூரில் ரயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, ஜூன் 17- திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் பாரபட்ச போக்கைக் கண்டித்து, தட்சண ரயில்வே ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதிமுறைப்படி தங்களுக்கு வழங்க வேண்டிய 170 கிளைகளில், வெறும் 70 கிளை களை மட்டுமே வழங்கி நிர்வாகம் பார பட்சம் காட்டுவதாகவும், மீதமுள்ள 100 கிளைகளை உடனே வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பத்தூர் கிளைச் செயலாளர் ரவி தலைமையில், சேலம் கோட்டத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் செல்வம், கிருஷ்ணன், முத்து ஜெயா, காமராஜ், உமேஷ் மங்குண்டு, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram