முந்தய பக்கம்

வெறிச்சோடிய மக்கள் குறைதீர் கூட்டம்

12 May 2026, 1:57 am
வெறிச்சோடிய மக்கள்  குறைதீர் கூட்டம்

வெறிச்சோடிய மக்கள் குறைதீர் கூட்டம்

திருப்பத்தூர், மே 12- தமிழகத்தில் கடந்த மார்ச் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

தேர்தல், ஓட்டு எண்ணிக்கை மற்றும் புதிய அரசு பதவி ஏற்பு காரணமாக கடந்த 37 நாட்களாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது.

இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர் உள்ளிட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை தமிழகத்தில் புதிய ஆட்சி பதவி ஏற்றது.

இதனால் திங்கட்கிழமையான ஞாயிறன்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு கலெக்டர் சிவ சவுந்திரவல்லி தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

ஞாயிறன்று நடந்த கூட்டத்தில் பொது மக்கள் வருகை குறைந்து மக்கள் குறைதீர் கூட்ட அரங்கு வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த கூட்டத்தில் வெறும் 190 மனு மட்டுமே வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் தேர்தலுக்கு முன்பு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 500 முதல் 700 மனு வரை குவிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram