தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 60 பேருக்கு பணி நியமன ஆணை
1 hour before
<p><strong>தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 60 பேருக்கு பணி நியமன ஆணை</strong></p><p>திருப்பத்தூர், நவ.20- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், தேர்வான 60 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
