திருப்பத்தூரில் தனியார் பள்ளி வாகனங்களில் வருடாந்திர ஆய்வு
13 May 2026, 2:31 am
<p><strong>திருப்பத்தூரில் தனியார் பள்ளி வாகனங்களில் வருடாந்திர ஆய்வு</strong></p><p>திருப்பத்தூர், மே 12- திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. இதில் திருப்பத்தூர்,நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் இயங்கும் இயங்கும் 215 பள்ளி பேருந்துகள் ஆய்விற்கு வந்த நிலையில்,இதில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் வரதராஜன் பங்கேற்று,பள்ளி வாகனங்களில், மாணவர்கள் ஏறுவதற்கு படிகள், மற்றும் அமருவதற்கு இருக்கைகள், மற்றும் பேருந்துகளில், முதலுதவி கருவிகள், பிரேக் மற்றும், அவசர வழிகள், உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இதில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம்,போக்குவரத்து ஆய்வாளர் முரளி மற்றும்அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.</p>
