முந்தய பக்கம்

பணி நிரந்தரம் கோரி திருப்பத்தூர் நகராட்சியில் போராட்டம்

3 Jul 2026, 1:10 am
பணி நிரந்தரம் கோரி  திருப்பத்தூர் நகராட்சியில் போராட்டம்
<p><strong>பணி நிரந்தரம் கோரி திருப்பத்தூர் நகராட்சியில் போராட்டம்</strong></p><p>திருப்பத்தூர், ஜூலை 2 – திருப்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 147 தூய்மை பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், பாதுகாப்பு உப கரணங்கள் கோரியும் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரியும் தங்களுக்கு முககவசம், கையுறை வழங்கப்படுவதில்லை என்றும், இதனால் நோய்த்தொற்று அபாயம் உள்ளதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், மேற்பார்வையாளர் ரஞ்சித்குமார் தங்களின் சம்பளத்தில் தலா 500 ரூபாய் கமிஷன் கேட்டு மிரட்டுவதாகவும், இது குறித்து ஆணையாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி, பணி யாளர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தையடுத்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram