திருப்பத்தூர் நில அளவை அலுவலர்கள் போராட்டம்...
19 Nov 2025, 3:33 pm
<p>சென்னை, நவ. 19- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் முன்பு போல் இரவு நேரத்தில் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே மீண்டும் தொடங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேர ரயில்கள் ரத்து: சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட இரவு நேர ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த ரத்து நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புதிய ரயில் கால அட்டவணை வெளி யிடப்படும். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புறநகர் ரயில் கால அட்டவணை வெளி யிடப்பட்டபோது, தெற்கு ரயில்வே சுமார் 60 சேவைகளை பல்வேறு புறநகர் பகுதிகளில் ரத்து செய்தது. இதில் அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி செல்லும் நள்ளிரவு ரயில்களும் அடங்கும். திருத்தணி மற்றும் அரக்கோணம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாரிமுனை, ஒரகடம், திருப்பெரும்புதூர் போன்ற பகுதி களில் உள்ள தொழிற்சாலைகளில், நிறுவனங்க ளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த தொழி லாளர்கள் இரவு நேர ரயில் சேவைகளை நம்பி பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வார்கள். ஆனால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் இரவு முழுவதும் தங்கி, அதிகாலை ரயிலில் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) இரவு முழுவதும் தொடர்ச்சியாக பேருந்து சேவைகளை இயக்கி வருகிறது. பூந்தமல்லி பேருந்து முனையங்கள் முக்கிய போக்குவரத்து மையங்களாக மாறியுள்ளன. இந்நிலையில், இரவு நேர ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் செல்லும் ரயிலின் தேவை இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் பணிபுரியும் தொழிலாளி வெங்கடேஷ் கூறுகையில், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் இரவு நேர ரயில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் துறைமுகம், அம்பத்தூர் தொழிற் பேட்டை, திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டை பகுதிகளில் பணிபுரிந்து, திருவள்ளூரை கடந்து அரக்கோணம் வரை வசிக்கும் மக்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டை பகுதியில் பணிபுரியும் தொழிற்சாலை தொழிலாளர்கள், பேருந்துகளில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகில் இறக்கப்பட்டு, இந்த இரவு ரயிலில் ஏறி வீடு திரும்புவார்கள். இந்த முக்கிய சேவை ரத்து செய்யப்பட்டதால், தொழிற்சாலை தொழிலாளர்கள் ரயில் நிலைய நடைமேடையில் தங்கி, அதிகாலை சென்னை யில் இருந்து திருத்தணிக்கு செல்லும் ரயிலில் ஏறி செல்ல வேண்டியுள்ளது என்று கூறினார். இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் கடைசி ரயிலைப் பிடிக்க முடியாதவர்கள், அரக்கோணம் மற்றும் திருத்தணிக்குச் செல்ல எந்த ரயில் சேவையும் இல்லை. இந்த கடைசி ரயிலில் பயணிப்பவர்களுக்கு அது ஒரு தண்டனையாக உள்ளது. ஏனெனில், இந்த 8 பெட்டி மெயின் லைன் எலக்ட்ரிக்கல் மல்டிபிள் யூனிட் ரயில், ஆவடி ரயில் நிலை யத்தை அடையும்போதே கூட்டம் அதிகரித்து விடுகிறது என்றும் தொழிலாளர்கள் தெரி விக்கின்றனர். அதேபோல் சென்னை செண்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அந்த பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தென்னக ரயில்வே மீண்டும் இரண்டு வழித்தடங்களிலும் தொழிலாளர்களின் நலன் கருதி இரவு நேர ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
