முந்தய பக்கம்

ஏரியை தூய்மை படுத்துங்கள்: வாலிபர்சங்கம் கோரிக்கை

16 Jun 2026, 12:21 am
ஏரியை தூய்மை படுத்துங்கள்: வாலிபர்சங்கம் கோரிக்கை
<p><strong>ஏரியை தூய்மை படுத்துங்கள்: வாலிபர்சங்கம் கோரிக்கை</strong></p><p>திருப்பத்தூர், ஜுன் 15- திருப்பத்தூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது 100 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவு நீர் ஏரியாக உள்ளது. ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக அமைக்கவும் படகு இல்லம் அமைக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் சனிக்கிழமையன்று நடைப்பெற்றது. அந்த மனுவை வாலிபர் சங்க திருப்பத்தூர் தாலுகா செயலாளர் தியாகமூர்த்தி மற்றும் சிபிஎம் திருப்பத்தூர் செயலாளர் காமராஜ் ஆகியோர் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram