திருப்பத்தூரில் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
12 May 2026, 10:41 pm
<p><strong>திருப்பத்தூரில் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>சிவகங்கை, மே 12- சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் அண்ணாசிலை அருகே ஆணவ படுகொலையை கண் டித்து மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிபாலன்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (17) என்ற இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கார் ஏற்றி கொலை செய் யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் இதுவரை கைது செய் யப்படாத நிலையில், சம்பவத் திற்கு காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படும் சிலரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி னர். இந்த ஆர்ப்பாட்டத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறு த்தைகள் கட்சி ஆகிய அமைப்பு கள் இணைந்து நடத்தின. ஆர்ப் பாட்டத்திற்கு இராமச்சந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் கண்டன உரையாற்றினார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சாத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் காளிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருமயம் பகுதிகளைச் சேர்ந்த ஏரா ளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண் டும் என கோரிக்கை விடுத்தனர்.</p>
