திருப்பத்தூர் மாவட்டத்தில் கேஸ் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் விசிக ஆர்ப்பாட்டம்
8 May 2026, 12:38 am
<p><strong>திருப்பத்தூர் மாவட்டத்தில் கேஸ் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் விசிக ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பத்தூர், மே 7 - கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளின் சார்பில் வியாழனன்று (மே 7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் கட்சி தாலுகா செயலாளர் காமராஜ், சிபிஐ மாவட்ட செயலாளர் நந்தி, விசிக மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காத்தவராயன், சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், சிபிஎம் மாவட்ட குழு அருள் சீனிவாசன், சிபிஐ கட்சி நிர்வாகி கள் சுந்தரேசன், சாமி கண்ணு, விசிக நிர்வாகிகள் ஓம் பிரகாஷ், தங்கபாண்டியன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
