வனவிலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்!
17 May 2026, 1:54 am
<p><strong>வனவிலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்!</strong></p><p>ஜோலார்பேட்டை, மே 16- திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டத்தில் கோடை வெயி லின் தாக்கத்தில் இருந்து வனவிலங்குகளைப் பாது காக்கும் பொருட்டு, 54 பண்ணைக் குட்டைகள் மற்றும் தொட்டி களில் வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்டு வரு கிறது.</p><p>திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை வனப்பகுதியில் ஓங்கி வளர்ந்த பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் மற்றும் அரிய வகை மூலிகைகள் நிறைந்துள் ளன. இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்த காப்புக்காடுகளும் (Reserved Forests) காணப்படு கின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் மான், காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.</p>
