முந்தய பக்கம்

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம்

8 Jun 2026, 11:13 pm
விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க  வலியுறுத்தி திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம்
<p><strong>விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பத்தூர், ஜுன் 8- திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றி யம் குரும்பேரி ஊராட்சி நச்சுக் குட்டை புறம்போக்கிலும், காடவள்ளி ஏரி ஜவ்வாது மலை அடிவாரத்திலும் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்துவரும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று திருப்பத்தூர் நகராட்சி அரசு பூங்கா எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தாலுக்கா தலைவர் சிங்காரம் தலைமையில் நடை பெற்றது. தாலுக்கா செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த தமிழ்நாடு விவசாய சங்க வேலூர்- திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சாமிநாதன் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் காசி, வீரமணி, சிவாஜி, வெங்கடேசன், வீரபத்திரன், பர்வதம், செல்வம், முத்து கிருஷ்ணன், சிஐடியு கேசவன், முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram