முந்தய பக்கம்

திருப்பத்தூரில் விவசாயி மொட்டை அடித்து நூதன போராட்டம்

12 Jun 2026, 10:33 pm
திருப்பத்தூரில் விவசாயி மொட்டை அடித்து நூதன போராட்டம்
<p><strong>திருப்பத்தூரில் விவசாயி மொட்டை அடித்து நூதன போராட்டம்</strong></p><p>திருப்பத்தூர், ஜூன் 12- திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவல கத்தில் உதவி ஆணை யர் வேடியப்பன் தலைமை யில் வெள்ளியன்று விவசாயி கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்கு பொம்மிக்குப்ப த்தைச் சேர்ந்த விவசாயி ராதா கிருஷ்ணன் என்பவர் மொட்டை அடித்து, நாமம் போட்டு, அரை நிர்வாணமாக தட்டுடன் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். “தேர்தல் வாக்குறுதிப் படி 5 ஏக்கருக்குக் கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 விழுக்காடும் கூட்டுறவு பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல், முதல்வர் ஜோசப் விஜய் தற்போது வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் தள்ளுபடி என்று கூறி விவசாயிகளை வஞ்சிக்கிறார்” என அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, மற்ற விவசாயிகளும் முழக்கம் எழுப்பியபடி கூட்டத்தைப் புறக்கணித்து, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram