திருப்பத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
21 Jul 2026, 11:46 pm
<p><strong>திருப்பத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி</strong></p><p>திருப்பத்தூர், ஜூலை 21- திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் குருசிலாப்பட்டு கிராமத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாயன்று நடைபெற்றது. துறைத் தலைவர் பேரா. ஜெ. ஜான் ஆரோக்கியராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்த இப்பேரணியில், ஊராட்சி மன்றத் தலைவர் சரோஜா, காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர், அ.ஜான் மார்ட்டின் ஒருங்கிணைத்தார்.</p>
