திருப்பதி: பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு
yesterday
<p>திருப்பதி அருகே தனியார் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள 'டிஐஎல் ஹெல்த்கேர்' நிறுவனத்தில் காலை சுமார் 8 மணியளவில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். </p><p>இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
