தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

26 Jun 2026, 11:01 pm
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
<p><strong>காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு</strong></p><p> திருநெல்வேலி,ஜூன் 26- நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை இறுதிக்காலம் மற்றும் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு வீசும் பலத்த காற்றால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான காற்று சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காற்றாலைகள் முழுவீச்சில் இயங்கி வருகின்றன. குறிப்பாக காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், திசையன்விளை, நாங்குநேரி, செட்டிகுளம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகள் தமிழகத்தின் முக்கிய காற்றாலை மின் உற்பத்தி மண்டலங்களாக விளங்கி வருகின்றன. இயற்கையாக வீசும் பலத்தக் காற்றின் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுத்தமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மாநில மின் வலையமைப்பிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த சூறைக்காற்று தொடர்ந்து வீசி வருகிறது. இதன் காரணமாக காற்றாலைகளின் இறக்கைகள் மிக வேகமாக சுழலத் தொடங்கியுள்ளன. இதனால் மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளதாக காற்றாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் நாட்களில் மின் உற்பத்தியும் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்வதில் நெல்லை மாவட்ட காற்றாலைகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காற்று சீசன் உச்சத்தை எட்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மின் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் எனவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நெல்லை மாவட்டம் தொடர்ந்து முன்னணி இடத்தை தக்கவைத்திருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.