தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

7 Oct 2026, 8:50 pm
திருச்சி விரைவு செய்திகள்

அக்.10 இல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்

விருதுநகர், அக்.7-வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் அக்.10இல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியதாவது:18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அக்.10 இல் சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் 2027 ஜனவரி 1 ஐத் தகுதி நாளாகக் கொண்ட 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யலாம்.எனவே, விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்.10 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்துவாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இந்த சிறப்பு முகாமில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தேவையான ஆவணங்களுடன் விண் ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே செம்மண் கடத்தல் 2 பேர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்

சிவகங்கை, அக்.7–சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செம்மண் கடத்திச் சென்றதாக 2 பேரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.பொன்னாம்பட்டி அருகே தோட்டக் கலைத்துறை அனுமதியுடன் பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பண்ணைக்காக அமைக்கப்பட்ட குட்டையில் இருந்து எடுக்கப்பட்ட செம்மண்ணை அனுமதியின்றி வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்வதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பொதுமக்கள் தடுத்து நிறுத்திய டிப்பர் லாரியை சிவகங்கை தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பையூரைச் சேர்ந்த சுகுமார் செல்வம், பொன்னாம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன்ஆகியோரை கைது செய்தனர். செம்மண் கடத்த பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.அனுமதியின்றி மண் மற்றும் கனிம வளங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா எச்சரித்துள்ளார்.

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

இராமநாதபுரம், அக்.7-இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கையகம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறையின் உதவி இயக்குநர் டாக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

டாக்டர் எம்.திருச்செல்வி, டாக்டர் முகமது அஃப்ரின், கால்நடை ஆய்வாளர்கள் என்.பிரபாகரன், வீரகேசரி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுனைதாபானு, சேதுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் 56 மாடுகள், 250 ஆடுகள், 1,400 செம்மறி ஆடுகள், 10 நாய்கள் மற்றும் 395 கோழிகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பணப் பரிவர்த்தனை நிறுத்தம்; வாடிக்கையாளர்கள் அவதி

சிவகங்கை, அக்.7-சிவகங்கை நகரில் பல்வேறு கடைகளில் “ஒரு நாள் மட்டும் யுபிஐ மூலம் பணம் பெறப்படமாட்டாது” என அறிவிப்பு ஒட்டப்பட்டதால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை நம்பியிருந்த வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வங்கி சேவைக் கட்டணம் விதிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் ரொக்கப் பணம்செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

லஞ்சம்: சுகாதாரத்துறை துணை இயக்குநர் பணியிடை நீக்கம்

விருதுநகர், அக்.7-சிவகாசியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.கடந்த அக்.5ஆம் தேதி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட ஜெகவீரபாண்டியன், திருவில்லிபுத்தூரில் உள்ளமுதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்.16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

இராமநாதபுரம், அக்.7-பரமக்குடி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம், அக்.13 ஆம் தேதி பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.முகாமில் பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளிடம் மாதாந்திர உதவித் தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் பிற அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன.மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற் றின் நகல்களுடன் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே கேட் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் மதுரை கோட்ட மேலாளரிடம் சிபிஎம் மனு

சிவகங்கை, அக்.7-மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப் படுவதால், அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அல் லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியராஜ் தலைமையில் நிர்வாகிகள், மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்தனர்.மானாமதுரை முக்கியமான சந்திப்பு ரயில் நிலையமாக உள்ளதால், ரயில் களின் இயக்கம் காரணமாக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மாற்றுப்பாதை, உயர்மட்ட மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து பிரச்சனைக்கு

நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மன்னார்குடி–காரைக்குடி–மானாமதுரை ரயில் சேவை

யை மீண்டும் மானாமதுரை வரை நீட்டித்து இயக்க வேண்டும். தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் மானாமதுரை வழியாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது

திருவில்லிபுத்தூர், அக்.7-வத்திராயிருப்பு அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வ.புதுப்பட்டி பசும்பொன் தெருவைச் சேர்ந்த இசக்கியம்மாளின் மகன் எல்கேஜி படித்து வருகிறார். இசக்கியம்மாளும் அவரது கணவரும் சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு வந்த இசக்கியம்மாள், மகனை குளிக்க வைத்தபோது, அருகில் வசிக்கும் தங்கராஜ் பள்ளி முடிந்து வீடு திரும்பிய தனது மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்று கதவைப் பூட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இசக்கியம்மாள் அளித்த புகாரின் பேரில், வத்திராயிருப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.