தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

31 Oct 2026, 10:18 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

6 நாளுக்கு பிறகு விசைப்படகுமீனவர்கள் கடலுக்குச் சென்றனர்

தூத்துக்குடி, அக்.31 -தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 6 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 31 அன்று மீண்டும் மீன்பிடிக்கக் கடலுக்குச்சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து வழக்கமாக தினசரி 272 விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கட

லுக்குச் சென்று வரும். இந்நிலையில், புயல் எச்சரிக்கை மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 25-ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர்.தொடர்ந்து 6 நாட்கள் தொழில் முடங்கியிருந்த நிலையில், அக்டோபர் 31 அன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மொத்தம் 214 விசைப்படகுகளில் மீனவர்கள்மீன்பிடிக்கக் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மேக்கரை வனப்பகுதியில் மாவட்ட வன அலுவலர் ஆய்வு

தென்காசி, அக். 31-தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேக்கரை வனப்பிரிவில், தமிழ்நாடு – கேரள மாநிலங்களுக்கு இடையிலான வன எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட வன அலுவலர்முனைவர் ஆர். ராஜ்மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, இரு மாநிலங்களுக்கிடையிலான வன எல்லைகளைச் சரிபார்த்தல், எல்லைகளைத் தெளிவாக அடையாளப்படுத்தும் வகையில் புதிய எல்லைக் கற்கள் அமைத்தல், வனத் தீ விபத்துகளைத் தடுப்பதற்காகத் தீத்தடுப்புக் கோடுகள் அமைத்தல் மற்றும் வனஉயிரினங்கள், குறிப்பாக யானைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடப் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அச்சன்கோவில் பகுதியில் உள்ள கேரள வனத்துறையின் சோதனைச் சாவடிப் பகுதியைப் பார்வையிட்ட மாவட்ட வன அலுவலர், அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு வனப்பகுதியில் புதிதாக வேட்டைத் தடுப்பு முகாம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்தார்.

இரு மாநில வனத்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வன எல்லைகளை முறையாகப் பராமரித்தல், வனத் தீ தடுப்புநடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் மற்றும் யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றுக்கு இந்த ஆய்வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மதுபோதையில் ஹேர் டை குடித்து தனியார் பள்ளி காவலாளி பலி

தூத்துக்குடி, அக்.31- தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமாரியப்பன் (55). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் தங்கமாரியப்பன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது தலைக்கு ஹேர் டை அடிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி பொன்மாரி, வேண்டாம் என்று தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கமாரியப்பன், மனைவியைப் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டு, வீட்டின் வராண்டாவில் அமர்ந்து தலைக்கு அடிக்கும் ஹேர் டையை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக மயக்க நிலையிலிருந்த தங்கமாரியப்பனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மனைவியும் உறவினர்களும் கொண்டு சேர்த்தனர்.அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 30 அன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடி, அக்.31- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் கலந்துகொண்டு, கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.

இவ்விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

புதிய நிர்வாகிகள்

தேர்வுதென்காசி, அக்.31- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேலநீலிதநல்லூர் வட்டாரக் கிளைக்கான தேர்தல், அக்டோபர் 30 அன்று நடைபெற்றது.

இதில் வட்டாரத் தலைவராக புஷ்பஜோதி, துணைத் தலைவர்களாக குயின், சுரேஷ், ராஜபாண்டி, வட்டாரச் செயலாளராக ஆரோக்கியராஜ், துணைச் செயலாளர்களாக ஸ்டான்லி பிரின்ஸ், சித்ரா, பாக்கியலட்சுமி, வட்டாரப் பொருளாளராக விஜயகுமார், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினராக திலகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அனுமதியின்றி வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

தூத்துக்குடி, அக்.31- திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

திருச்செந்தூர் நகராட்சியில் தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றியது போன்ற அனைத்து நிறுவனங்களிலும் ஆய்வுமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர் நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி காயல்பட்டினம், கோவில்பட்டி ஆகியநகராட்சிகளில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு அனைத்து வணிக நிறுவனங்களிலும் குடிநீர் குழாயில் விதிமுறைக்கு மீறி மின் மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சுபவர்கள், வரி இல்லாமல் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஆகியவற்றினை சிறப்பு குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்தஆய்வின் முடிவில் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் நகராட்சியில் அனுமதியின்றி விடுதிகளாக செயல்படும் வீடுகளில் நகராட்சி ஆணையாளர் ஏழுவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றுவதற்கு நகராட்சியில் உரிய அனுமதி பெற்று செயல்பட வேண்டும்.அவ்வாறு அனுமதி பெறாமல் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நெல்லை மாநகரச் சாலைகள் மேயர், ஆணையரிடம் சிபிஎம் கவுன்சிலர் முறையீடு

திருநெல்வேலி, அக் 30-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினரும் 55 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமானமுத்துசுப்பிரமணியன் நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கினார்.அதில் கூறியிருப்பதாவது:

நெல்லை மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் மூலம் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது, தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர், எனவே போர்க்கால அடிப்படையில்சாலையை சீரமைக்க வேண்டும் .எனது 55

ஆவது வார்டில் உள்ள கடைசி பகுதியான குரேசன் நகர் முதல் ராஜகோபாலபுரம் வரை மழை நீர் ஓடையை சரி செய்ய பலமுறை மாநகராட்சியிடம் வலியுறுத்தியும் இன்னும் செயல்பட்டுக்கு வந்த பாடு இல்லை.மேலும் மனப்படைவீடு குடிநீர் திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஆட்சிமடம் பம்ப் ரூமை விரைந்து சரி செய்தால்தான் இது நடைமுறைக்கு வரும். ஆகவே இதற்கும் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ராம் அண்ட் கோ கம்பெனி அதன் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பிஎஃப் பணத்தை உடனடியாக செலுத்த மாநகராட்சி தலையிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

தேனி, அக்.31-நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் சனிக்கிழமை முதல் அனுமதி அளித்துள்ளனர்.பெரியகுளத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயப் பகுதிக்கு உட்பட்ட இந்த அருவி, தேவதானப்பட்டி வனச்சரகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல், பாம்பார்புரம், வெள்ளகெவி உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவெள்ளிக்கிழமை வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.தற்போது மழை குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.