தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

8 Oct 2026, 10:48 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

சேர்க்க அக்.10 இல் சிறப்பு முகாம்

தூத்துக்குடி,அக்.8-இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில்முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்கும் வகையில் (தொடர்திருத்தம் - 2026), மாவட்டத்தின் அனைத்துச் சட்டமன்றத்தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 10.10.2026 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில்உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இச் சிறப்புமுகாம் நடைபெறவுள்ளது.முகாம் நடைபெறும் நாளன்று, வாக்குச்சாவடி நிலைப் அலுவலர்கள் (BLO) உரிய விண்ணப்பப் படிவங்கள் மற்றும்நடப்பு வாக்காளர் பட்டியலுடன் மையங்களில் தயாராக இருப்பார்கள்.எனவே, புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் தங்களது வண்ண பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1, வயதுச் சான்றுமற்றும் முகவரிச் சான்றுகளின் நகல்களுடன் தங்களது பகுதி வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட, தகுதியுடைய நபர்கள் அனைவரும் இச் சிறப்புவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமானவிஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

அக்.13 நெற்கட்டும்செவலில் மக்கள் மனுக்கள் வழங்க அழைப்பு

தென்காசி, அக். 08-தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் 11.11.2026 அன்று மக்கள் தொடர்பு முகாம்நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு அக்டோபர் 13 ஆம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள மாமன்னர் பூலித்தேவன்மணிமண்டபத்தில் காலை 10 மணி முதல் பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட உள்ளன.எனவே இக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறுமாறுமாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

அக்.12-இல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி, அக். 8-நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர் தங்கள் குறையைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 12 ஆம் தேதி மாலை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி,அக்.8-மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வியாழனன்று இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தை மையமாகக் கொண்டு 272 விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்களும், துறைமுகத்தை சார்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக மீனவர்கள் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மீன்களுக்குக் வியாபாரிகள் தரப்பில் உரிய விலைவழங்‌கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. டீசல் விலைஉயர்வு, வலை மற்றும் படகு பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில்,மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி, புதனன்று முதல் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து வியாழனன்று 2-வது நாளாகவும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தை நீடித்துள்ளனர்.

மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் வரிசையாகக் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், துறைமுகப் பகுதியில் கோடிக் கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.விசைப்படகுத் தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர்.

வேறு பயன்பாட்டுக்கு வழங்காமல் பாளை. சித்த மருத்துவக் கல்லூரி இடத்தை பாதுகாத்திடுக! மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி, அக் 8-​நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் தோன்றிய முதல் பாரம்பரியமிக்ககல்லூரியாகும். 65 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் மற்றும் நர்சிங் போன்ற பாடப்பிரிவுகளில் 600க்கும்மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

​இக்கல்லூரியை மேம்படுத்துவதற்காக கடந்த திமுக ஆட்சியில் ரூ.40 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சித்த மருத்துவக் கல்லூரி இடத்தில் மாணவர் விடுதி கட்டும் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ​வண்ணார்பேட்டையில்உள்ள புதிய மாணவர் விடுதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தை,அருகில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதை எதிர்த்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் சேவைப் பிரிவையும் புறக்கணிப்பதாக அறிவித்ததால் அங்கு பரபரப்புஏற்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி இயங்குவதற்கு குறைந்தபட்சம் 5 ஏக்கர் இடம் இருக்க வேண்டும். தற்போது நிலப்பற்றாக்குறை உள்ள நிலையில், இக்காப்பக இடத்தை ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு வழங்கினால் இக்கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்ஏற்படும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தன் மாவட்ட செயலாளர் சைலஸ் அருளராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , பாரம்பரியமான சித்த மருத்துவக்கல்லூரியை பாதுகாப்பதோடு, உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த வேண்டும். இந்திய மாணவர் சங்கம்சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுமுன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.