திருநெல்வேலி விரைவு செய்திகள்
24 Jul 2026, 10:04 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

தூத்துக்குடியில் பெண் கொடூரக் கொலை: மீனவர் கைது

தூத்துக்குடி, ஜுலை 24- தூத்துக்குடியில் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தலையில் தாக்கிக் கொலை செய்த வரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்து லட்சுமி (56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ஆம் தேதி மகள் வெளியூருக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணை யில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதையறிந்த அவரது மகள் சத்யா மற்றும் உறவினர்கள், கொலையாளியைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த லோபஸ் என்பவரின் மகன் இன்னசென்ட் ரீகன் (34) என்பவர் முத்துலட்சுமியின் தலையில் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரைப் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட இன்னசென்ட் ரீகன் மீது ஏற்க னவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தூத்துக்குடி யில் திருட்டு பைக்கில் சுற்றித் திரிந்துள்ளார். சம்பவத் தன்று திண்ணையில் தனியாகப் படுத்திருந்த முத்துலட்சுமி யிடம் பணம் எதுவும் உள்ளதா எனப் பார்க்கச் சென்று உள்ளார். பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, முத்துலட்சுமி விழித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இன்னசென்ட் ரீகன், முத்து லட்சுமியின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கி ருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இன்னசென்ட் ரீகன் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

4 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் தென்காசியில் கைது

தென்காசி, ஜூலை 24- கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு தென்காசி வழியாக விரைவு ரெயில் இயக் கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக தென்காசி ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வியா ழனன்று அதிகாலை தென்காசிக்கு ரெயில் வந்தது. அப்போது தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து. மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் தள வாய் பொன்தனசேகர் ஆகியோர் ரெயிலில் ஏறி தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலில் பயணித்த ஒருவரை சந்தே கத்தின் பேரில் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி னர். அப்போது அந்த நபரின் பெயர் ரசீப்ஷா என்பதும் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார். அவரது உடைமை களை சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த பையில் சுமார் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை அவர் மேற்கு வங்கத்தில் இருந்து தென் காசிக்கு கொண்டு வந்து இங்குள்ள இளைஞர்களிடம் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அவரை பிடித்து தென்காசி மதுவிலக்கு போலீ சாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசீப்ஷாவை கைதுசெய்தனர் மேலும் அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங் களை யும் பறிமுதல் செய்தனர்.

அபிராமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திடுக!

எம்எல்ஏ-விடம் சிபிஎம் மனு அளிப்பு இராமநாதபுரம், ஜூலை 24- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிரா மத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை த்தந்தார். அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா குழு அபிராமம் கிளையின் சார்பாக சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் அபிராமத்தில் பேரூராட்சியின் பழைய அலுவலக கட்டிடத்தை காலி செய்து ராம்கோ கூட்டுறவு நியாய விலை கடை (எண் 5) புதிய கட்டிடம் கட்டி கடை அமைத்துக்கொடுக்க வேண்டும். அபிராமம் நகரில் பேரூராட்சிக்கு சொந்தமான பழைய பேரூராட்சி அலுவலக இடத்தில் திருமண மஹால் (காரியாபட்டி பேரூராட்சியில் இருப்பது போல்) அமைத்துக் கொடுக்க வேண்டும். அபிராமம் பேரூராட்சியின் வருவாயை பெருக்கிடஅபிராமம் சந்தையை விரி வாக்கம் செய்து ஆடு கோழி விற்பனை சந்தை அமைத்திட வேண்டும். அபிராமத்தில் அபிராமம் எல்லை உட்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசின் பாலி டெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. அபிராமம் கிளைச் செயலாளர் கே.வீரய்யா, கே. முனியசாமி ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஏரல் வட்டம் உமரிக்காடு ஊராட்சியில் தனி குறியீட்டுடன் அஞ்சலகம் அமைத்திடுக! ஒன்றிய அமைச்சருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை

தூத்துக்குடி, ஜூலை 24- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் உமரிக்காடு ஊராட்சியில் தனி PIN குறியீட்டு டன் அஞ்சலகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், கொற்கை கிராமத்திற்கு உட்பட்ட உமரிக் காடு ஊராட்சியில் அமைந்துள்ள உமரிக்காடு அஞ்சலகம் தற்போது ஆத்தூர் அஞ்சலகத்து டன் (PIN குறியீடு: 628 151) இணைக்கப்பட்ட ஒரு துணை அஞ்சலகமாகச் செயல்பட்டு வருகிறது. உமரிக்காடு ஊராட்சிப் பகுதியில் சுமார் 1,900 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இதே எண்ணிக்கையிலான உமரிக் காடு கிராமத்தைச் சார்ந்த மக்கள் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களி லும் பெங்களூரு, தில்லி மற்றும் மும்பை போன்ற இந்திய பெரு நகரங்களிலும், சிங்கப் பூர், மலேசியா, இலங்கை மற்றும் அமெ ரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர். ஏராளமான கடித பரிமாற்றமும் இதர தபால் சேவைகளும் சுமார் 1500 தபால் நிலைய சிறு சேமிப்பு கணக்குகளும் உமரிக் காடு துணை அஞ்சலகத்தின் மூலம் நடை பெறுகின்றன. எனவே, உமரிக்காடு அஞ்சல கத்தை அதற்கெனத் தனித்துவமான PIN குறி யீட்டுடன் கூடிய ஒரு நேரடி தனி அஞ்சலக மாகத் தரம் உயர்த்துவது அவசியத் தேவை யாகிறது. இக்கோரிக்கையை உரிய முறை யில் பரிசீலித்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 242 குளங்கள் முற்றிலும் வறண்டன கார் சாகுபடி பயிருக்கு விலைக்கு நீர் வாங்கும் விவசாயிகள்

திருநெல்வேலி ,ஜூலை.24- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங் களில் இந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. அதே நேரம் குளங்கள் ஏராளமானவை வறண்டு போய்விட்டது. நெல்லையை பொறுத்த வரை மாவட்டத் தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 67 அடியாக குறைந்து விட்டது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் நீர் இருப்பு தினந்தோறும் 1 அடி என்ற வீதத்தில் குறைந்து வருவதால் கார் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை முற்றிலும் ஏமாற்றி விட்டதால் மழையை நம்பி கீரை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் டிராக் டர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி வயலில் பாய்ச்சி பயிர்களுக்கு உயிர் கொடுக்கின்றனர். அதேநேரத்தில் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 71 அடி மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது விவசாயத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை குறைத்து குடிநீருக்காக பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதேபோல் மழை பொய்த்து போன தால் நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்க ளிலும் தண்ணீர் வற்றி போய் உள்ளது. மாவட்டத்தில் 440 குளங்களில் 21 குளங்களில் மட்டுமே முழுமையான அளவு நீர் இருப்பு உள்ளது. 18 குளங்களில் 75 சதவீதத்திற்கு மேலும், 34 குளங்களில் 75 சதவீதம் அளவும் நீர் இருப்பு உள்ளது. 239 குளங்களில் 25 சத வீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள 103 குளங்கள் முற்றிலும் வறண்டநிலையில் இருக்கிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 91 குளங்களில் 2 குளங்களில் மட்டுமே 25 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 89 குளங்கள் வறண்டு விட்டன. இதே போல் தென்காசி மாவட்டத்திலும் சுமார் 50 குளங்கள் வறண்டு போயுள்ளன.