தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

20 Jul 2026, 10:18 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

பாபநாசம் அணையில் 69.25 அடி நீர் இருப்பு

திருநெல்வேலி, ஜூலை 20 - நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்ட விவரங்கள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. பாபநாசம் அணையின் மொத்த உயரம் 143 அடி. தற்போது 69.25 அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 333.64 கனஅடி தண்ணீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 804.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சேர்வலாறு அணையின் முழு உயரம் 156 அடி. தற்போது 78.05 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. மணிமுத்தாறு அணையின் மொத்த உயரம் 118 அடி. அணையில் 72.30 அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 73.92 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 175 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடக்கு பச்சையாறு அணையின் முழு உயரம் 50 அடி. தற்போது 6 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. நம்பியாறு அணையின் முழு உயரம் 22.96 அடி. தற்போது 14 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. கொடுமுடியாறு அணையின் முழு உயரம் 52.50 அடி. தற்போது 42 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து இல்லை. வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கணவர் கொலை வழக்கில் கூடுதல் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை

தூத்துக்குடி, ஜுலை 20 - தூத்துக்குடியில் தனது கணவர் கொலை வழக்கில் கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி தீரேஸ் நகரைச் சேர்ந்த சங்கரேசன் மனைவி சுகந்தி (39) என்பவர் தனது உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாலை தனது கணவர் சங்கரசேகரன் (43), மாதா நகர் அருகே மர்ம நபர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொ டர்பாகத் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுப் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட சங்கரசேகரன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எஸ்சி அல்லாத இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தொழில் போட்டி, சாதி வன்முறை மற்றும் சாதி அடிப்படையிலான வெறுப்புணர்வு ஆகியவை கலந்து இக்கொடூரக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு உட்பட்டது என்பதால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆருடன் கூடுதலாக எஸ்சி/எஸ்டி பிஓஏ சட்டப் பிரிவுகளின் கீழ் வன்கொ டுமை வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கணவரின் திடீர் மறைவு தங்களது குடும்பத்தைப் பொருளாதாரம் மற்றும் மனநல ரீதியாக முற்றிலும் பாதித்துள்ளதா கவும், தங்களது குடும்பத்திற்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும், வழக்கின் முன்னேற்ற அறிக்கை யை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோ ரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த மனுவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அளித்துள்ளார்.

கொடைரோடு அருகே சாலையோர கல்குவாரியை ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

சின்னாளப்பட்டி, ஜூலை 20- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் கல் நொறுக்கும் கிரசர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின் பற்றி செயல்படுகிறதா என்பதை அதிகாரி கள் உடனடியாக ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்க ளும் விவசாயிகளும் கோரிக்கை விடுத் துள்ளனர். கொடைரோடு டோல்கேட்டிலிருந்து நாகையகவுண்டன்பட்டி, ஜல்லிப்பட்டி வழியாக சக்கையாநாயக்கனூர், அழ கம்பட்டி செல்லும் சாலையோரத்தில் இந்த கல்குவாரி செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல்–மதுரை தேசிய நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகளின் போது, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி யில் பெருமளவில் கற்கள் வெட்டி எடுக்கப் பட்டதால், 200 அடி ஆழம் கொண்ட பள்ளம் உருவாகி, தற்போது அதில் நீர் தேங்கி காணப்படுகிறது.

கோவில் பூசாரி தாக்கப்பட்ட விவகாரம் : காவல்நிலையம் முற்றுகை

சின்னாளப்பட்டி, ஜூலை 20- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ. மெட்டூர் கிராமத்தில் கோவில் பூசாரி தாக்கப்பட்ட சம்ப வத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிராம மக்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக அம்மைய நாயக்கனூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெ.மெட்டூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஜம்புதுரை அம்மன் கோவிலின் பூசாரியாக கமலக்கண்ணன் (38) பணியாற்றி வருகிறார். ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளை முடித்துவிட்டு, தனது மனைவி மாரி (33) மற்றும் இரண்டு குழந்தைக ளுடன் வீட்டிற்கு சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற அவரது மனைவி மாரியும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் நிலக்கோட்டை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கிராம மக்கள் மற்றும் பெண்கள் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் காவல்துறை அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்து கைது நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயப் பெருவிழா ஆகஸ்ட் 5: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி, ஜுலை 20 - தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக் குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடு முறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழா-2026 ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் நிறைவு நாள் ஆகஸ்ட் 5ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2026 (புதன்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழு வதும் உள்ளூர் விடுமுறையாக அறி விக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது செலா வணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 05.08.2026 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம் பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசி ரியர்கள், தொடர்புடைய பணியாளர்க ளுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது. மாவட்டக் கருவூலம், சார்நிலை கரு வூலங்கள் குறைந்த அளவு பணியாளர்க ளைக் கொண்டு வழக்கம் போல் செயல் படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, 08.08.2026 இரண்டாவது சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வழக்கமான அலுவலக வேலை நாளாக அறிவிக் கப்பட்டுள்ளது.

விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்

தூத்துக்குடி, ஜுலை 20 - தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகே விசைப்படகு ஒன்று கடலில் மூழ்கிப் பதிந்துள்ளதால், மற்ற படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி தருவைகுளம் அம்பு ரோஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் மைக்கில் ஜெய் சிங் (43). இவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி தருவைகுளத்தில் இருந்து 8 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குள் சென்றனர். விசைப்படகு தருவைகுளத்தில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டி ருந்த போது, எதிர்பாராத விதமாகப் பழுது ஏற்பட்டது. இதனால் கடல் நீரானது படகிற்குள் புகுந்து, பேட்டரி வரை ஏறிய தால் விசைப்படகு கடலிலேயே செயலி ழந்து நின்றது. படகு பழுதானதை அடுத்து, அதன் ஓட்டுநர் நலன்ராஜ் உடனடியாகப் படகின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து உரிமையாளர் மைக்கில் ஜெய் சிங், வேறு ஒரு விசைப்படகை நடுக்கடலுக்கு அனுப்பிப் பழுதான பட கைத் தருவைகுளத்திற்கு இழுத்து வர முற்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாகப் படகை இழுத்து வந்த தடித்த கயிறு திடீ ரென நடுவழியில் அறுந்தது. ஆபத்தான நிலையை உணர்ந்ததால், விசைப்படகில் இருந்த 8 மீனவர்களும் மற்றொரு படகின் உதவியுடன் பத்திரமாகக் கரைக்குத் திரும்பினர். தொடர்ந்து ஞாயிறன்று (ஜூலை 19) காலை இரண்டு இழுவை படகுகளை வைத்துப் பழுதான விசைப்படகைக் கரைக்கு இழுத்து வரும் பணிகள் நடை பெற்றன. மாலை நேரத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு மிக அருகில் வரும்போது, விசைப்படகு முழுவதும் நீர் புகுந்து கடலுக்குள் பதிந்து மூழ்கியது. இதனால் விசைப்படகை முழுமையாக இழுக்க முடியாமல் துறைமுக நுழைவா யில் பகுதியிலேயே அது சிக்கிக் கொண்டது. இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மற்ற விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து திங்களன்று (ஜூலை 20) தூத்துக்குடி மீன்பிடித் துறை முகத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. துறைமுகத்தைச் சேர்ந்த 272 விசைப் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. தற்போது கடலில் மூழ்கி யுள்ள விசைப்படகை அப்புறப்படுத்தும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் விபத்தால் தூத்துக்குடி பகுதி மீனவர்களின் வாழ்வா தாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.