திருநெல்வேலி விரைவு செய்திகள்
14 Jul 2026, 10:06 pm

ஜூலை 17 தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜூலை 14 - தூத்துக்குடியில் ஜூலை 17 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.7.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE, DIPLOMA, I.T.I ஓட்டுநர் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகுதியுள்ள தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப் போர்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Job seekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-இல் இணைந்தும், இவ்வலுவலக தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

தூத்துக்குடி, ஜூலை 14 - தூத்துக்குடி மாநகரப் பகுதியில் குற்றச் செயல்க ளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரவுடி உள்பட 2 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் ஜூன் 9 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கு அடிப்படையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த அனிபா மரைக்காயர் (26), தாளமுத்துநகர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பின்லேடன் (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதில், அனிபா மரைக்காயர் தாளமுத்துநகர் காவல் நிலைய ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர். மக்க ளின் அமைதிக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்து ரைக்கப்பட்டது. பரிந்துரையின்படி, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புத லுடன் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஆணைக் கோப்புகள், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனிபா மரைக்காயர் மற்றும் பின்லேடன் ஆகிய இருவரிடமும் சிறை அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

பெண்ணைக் கொலை செய்து நகைகள் கொள்ளை: ஒருவர் கைது

தூத்துக்குடி, ஜூலை 14 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (62). ஓய்வுபெற்ற சத்துணவு மேற்பார்வையாளரான இவர், ஜூலை 6 ஆம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவதியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். காலையில் எழுந்த கணவர் திருக்கண்ணன், மனைவி கொலையுண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். விளாத்திகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கபடி வீரர் திருமணி முருகன் (26) என்பவரைக் காவல்துறை யினர் கைது செய்தனர். விசாரணையில், திருமணி முருகன் கலாவதியைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த பின், தன் வீட்டின் முன் கட்டிலில் சர்வ சாதாரணமாகத் தூங்கியுள்ளார். காலையில் கலாவதியின் உடலைப் பார்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளார். காவல் துறையினர் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான திருமணி முருகன் விளா த்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை யங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா: சாதி ரீதியான டி-ஷர்ட்கள், முழக்கங்களுக்கு தடை

தூத்துக்குடி, ஜூலை 14 - குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் திரு விழாவில் பங்கேற்கும் பக்தர் கள் மற்றும் பொதுமக்கள் சாதி ரீதியான டி-ஷர்ட்கள் அணிவ தற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா ஜூலை 15 வரை மூன்று நாட் கள் நடைபெற உள்ளது. திரு விழாவை முன்னிட்டுப் பொது அமைதி மற்றும் சமூக நல்லி ணக்கத்தைப் பேணக் காவல் துறையினர் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். திருவிழாவில் பங்கேற் கும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சாதி ரீதியான டி-ஷர்ட்கள் அணிவதற்கும், பிற சமூகத்தினரின் உணர்வு களைப் புண்படுத்தும் வகையி லான முழக்கங்கள் எழுப்ப, வாசகங்கள் மற்றும் பாடல் களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா பகுதிக்குக் கம்பு, கத்தி, வாள் உள்ளிட்ட எந்தவொரு ஆயுதங்களையும் கொண்டு வர அனுமதி இல்லை எனப் பாதுகாப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவோ அல்லது ஆபத்தான முறையிலோ பய ணித்துப் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடை யூறு ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்ச ரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையி னரின் அறிவுரைகளையும், போக்குவரத்து ஒழுங்குமுறை களையும் முழுமையாகப் பின்பற்றிப் பாதுகாப்புப் பணி களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் 20 சாயப் பட்டறைகளுக்கு சீல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

தென்காசி, ஜூலை 14 - சங்கரன்கோவிலில், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 20 சாயப் பட்டறைகளுக்கு தென்காசி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆய்வில், உரிய அனுமதியின்றி செயல்பட்டது, சாயக் கழிவுநீரை சுத்தி கரிக்காமல் வெளியேற்றியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சுற்றுச்சூழல் பாது காப்புச் சட்டம் மற்றும் மாசு கட்டுப்பா ட்டு வாரிய விதிகளின்படி 20 சாயப் பட்ட றைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. மேலும், உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், மேல திக விசாரணை நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற் படுத்தும் வகையில் செயல்படும் தொழிற் சாலைகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், விதிமீறல் கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சீல் வைப்பு நடவடிக்கை யால் தொழில் மற்றும் தொழிலாளர்க ளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டி ருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூரில் ரூ.1.82 கோடியில் புதிய காத்திருக்கும் கூடம் கட்டும் பணி தீவிரம்

தூத்துக்குடி, ஜூலை 14 - தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திமுக ஆட்சிக்காலத்தில் 2022-இல் எச்.சி.எல். (HCL) நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ. 100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடங்கின. இதன் கீழ் இலவச பொதுத் தரிசனப் பாதையில் வரும் பக்தர்களுக்குக் காத்திருக்கும் அறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், ரூ.100 சிறப்பு தரிசனக் கட்டணப் பாதையில் காத்திருக்கும் கூடம் இல்லாத தால், கூட்ட நெரிசல் நேரங்களில் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் சூழல் நிலவுகிறது. இதைக் கலைந்து பக்தர்கள் நெருக்கடியின்றிப் பகுதிப் பகுதியா கச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏது வாக, உபயதாரர் பங்களிப்புடன் இப்புதிய காத்திருக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கோவில் ராஜகோபுரம் எதிரே வசந்த மண்டபம் அருகில் இரண்டு பகுதிகளாக மொத்தம் 17,808 சதுர அடி பரப்பளவில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொ டங்கப்பட்ட இக்கட்டுமானப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இக்கூடம் பயன்பாட்டிற்கு வரும் போது பக்தர்கள் வெயில் மற்றும் மழையி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இக்கட்டுமானப் பணிகளைக் கோவில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் ஆ.அருணாசலம், துணை ஆணையர் ந.யக்ஞ நாராயணன் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.