தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

29 Sept 2026, 8:48 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

தூத்துக்குடி,செப்.29- தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமூர்த்தி (70). ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரான இவர், பரமன்குறிச்சியில் உள்ள தனது குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சாமி கும்பிடச் சென்றுள்ளார். குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றதை நோட்டமிட்ட நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த 14 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளி நகைகள், 80 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய வீரமூர்த்தி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து சிப்காட் காவல் நிலையம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காவல்துறையினர் இப்பகுதிகளில் முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொள்ளையர்களால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகப் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

கங்கைகொண்டான் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிப்பு மனு கொடுக்க வந்த கிராம மக்களை தடுத்து காவல்துறை அராஜகம்

திருநெல்வேலி, செப்.29 -நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பஞ்சாயத்திற்குட்பட்ட துறையூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், தனியார் எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலைமற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகிய இரு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து தொடர்ந்து துர்நாற்றத்துடன் கூடிய நச்சுக்காற்று வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் நுரையீரல் சார்ந்த பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.மேலும்,இந்த தொழிற்சாலைகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் திறந்தவெளியில்விடப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம்பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்களும், கால்நடைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக, துறையூர் கிராம மக்கள் ஒரு வேனில்புறப்பட்டனர். வாகனம் கங்கைகொண்டான் துறையூரில் இருந்து புறப்பட்ட போதுஅங்கு வந்த போலீசார் வாகனத்தை வழிமறித்து, மனு அளிக்கச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி ஓட்டுநரிடமிருந்து வாகனத்தின் சாவியைப் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது காவல் ஆய்வாளர், மனு அளிக்க வந்த பொதுமக்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.தொடர்ந்து, காவல்துறையினர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த துறையூர் கிராம மக்கள், தங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பைஉண்டாக்கும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நச்சுக்காற்று மற்றும் கழிவுநீர்வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

28 நாட்களில் 24 அடி சரிந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ​குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருநெல்வேலி, செப்.29-நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அமைந்துள்ள பாபநாசம்மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்இன்றுவரை 28 நாட்களில் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் கணிசமான அளவில் நீர்மட்டம் குறைந்துள்ளநிலையில், அணைகளுக்கு வரும் நீர்வரத்திலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் செப்டம்பர் 1 ஆம் தேதி 70.85 அடியாக இருந்த நீர்மட்டம்,செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 46.25 அடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 28 நாட்களில் 24.60 அடி நீர்மட்டம்சரிந்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி பாபநாசம் அணைக்கு 374.803 கன அடிநீர்வரத்து இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீர்வரத்து முற்றும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

​அதே நேரத்தில், அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவு செப்டம்பர் 1 ஆம் தேதி 1,104.75 கன அடியாகஇருந்த நிலையில், தற்போது 379.75 கனஅடியாக உள்ளது. சேர்வலாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி 77.06 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 59.97அடி

யாகப் பதிவாகியுள்ளது. 28 நாட்களில் 17.09 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இரு தினங்களிலும் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து இல்லை, வெளியேற்றமும் இல்லை.

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதுடன், குறிப்பாக பாபநாசம் அணைக்கு வரும் நீர்வரத்து 374.803 கனஅடியிலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது கவலை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய 2 அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் இருப்பு குறித்து கவலை ஏற்படக்கூடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைப்பொழிவு, அணைகளின் நீர்டட்டத்தை மீண்டும் உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்நினோவால் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும்என்று வானியல் நிபுணர்கள் கணித்துள்ளதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் நெல்லையில் இரட்டைக் கொலை

திருநெல்வேலி. செப்.29-நெல்லை டவுன் மணிப்புரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம் (78), டால்டன் (76) உள்ளிட்ட 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் குவைத்தில் பணிபுரிந்து விட்டு ஊருக்கு வந்துள்ளனர். தற்போது மணிப்புரத்தில் ஒரே காம்பவுண்டில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான குடும்ப கோவில் உள்ளது. செந்தில்குமாருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். செந்தில்குமார் சென்னையில் வெல்டராகவும், ரஞ்சிதா டவுனில் உள்ள ஜவுளி நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். செந்தில்குமாருக்கு சொந்தமான கோவில் அருகே உள்ள இடத்தில் கார் நிறுத்துவது தொடர்பாக டால்டன் குடும்பத்தினருக்கும், செந்தில்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக சென்றபோது, கோவில் முன்பு வைத்து டால்டனின் மகன் நரேனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை பார்த்த நிக்கோலஸ் ராஜரத்தினம், சண்டையை தடுக்க அங்கு ஓடி வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதனை பார்த்து டால்டன் வீட்டில் இருந்து ஓடி வந்து செந்தில்குமாரை தடுக்க முயன்றபோது, அவரையும் செந்தில்குமார் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நரேன் சித்தப்பா மகன் நவீன் இதனை பார்த்த ஆத்திரத்தில் செந்தில்குமாரிடம் இருந்த கத்தியை பிடுங்க முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நவீன் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே டால்டன் உயிரிழந்தார். நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிக்கோலஸ் ராஜரத்தினமும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த நவீன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தங்கதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையாளர் சேகர் சஞ்சய் தேஷ்முக் மற்றும் கிழக்கு மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.