திருநெல்வேலி விரைவு செய்திகள்
11 Oct 2026, 10:01 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

கேரளாவுக்கு எம்-சாண்ட் மணல் கடத்த முயன்றவர் கைது

அருமனை, அக்.11– கன்னியாகுமரி மாவட்டம்அருமனை அருகே பனச்சமூடு சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தைச் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் எம்-சாண்ட் மணல் இருப்பது தெரியவந்தது .அவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதைத்தொடர்ந்து கேரளாவிற்கு தடையை மீறி கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பாகோடு குற்றிக்காட்டு விளையை சேர்ந்த டார்வின் ஆன்டனி என்பது தெரியவந்தது . வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அருமனை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மார்த்தாண்டம் வடக்கு தெருவெள்ளாங்குழி விளை பகுதியை சேர்ந்த வாகன உரிமையாளர் மகேஷ் (34) என்பவரை கைது செய்தனர்.

அவதூறு பேச்சு: யூடியூபர் கைது

தூத்துக்குடி, அக்.11-யூடியூப் சேனல்கள் மற்றும் நேர்காணல்களில் குறிப்பிட்ட மதம் குறித்து இழிவான மற்றும் ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில், சென்னையைச் சேர்ந்த யூடியூபரை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் மனுஒன்றை அளித்திருந்தார். அதில், சில யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் குறிப்பிட்ட மதம் குறித்து மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.இப்புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவரது மகன் கிருஷ்ணவேல் (56) என்பவரே யூடியூப் நேர்காணல்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக இத்தகைய அவதூறுகருத்துகளைப் பரப்பியது தெரியவந்தது.இதையடுத்து, சென்னைக்குச் சென்ற தூத்துக்குடி சைபர் கிரைம் தனிப்படை போலீசார், அசோக் நகரில் இருந்த கிருஷ்ணவேலைக் கைது செய்தனர். பின்னர் அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில்அடைத்தனர்.

வாகனத்தில் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்தவர் கைது

நாகர்கோவில், அக்.11-கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் ஆரல்வாய்மொழி வனத்துறை ஊழியர்கள் லெவிஞ்சிபுரம் பகுதியில் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்த மோகன் ( 28) என்பவர் இரண்டு நட்சத்திர ஆமைகளுடன் பிடிபட்டார்.விசாரணையில் லெவிஞ்சிபுரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்வதாகவும் ஏற்கனவே ஐந்து நட்சத்திர ஆமைகளை பிடித்து வைத்துள்ளதாகவும் மொத்தமுள்ள இந்த ஏழு நட்சத்திர ஆமைகளையும் விற்கலாம் என்ற எண்ணத்தில் பிடித்ததாகவும் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து மோகனை கைது செய்து நாகர்கோவில் வன வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

யூடியூபர் மதுமிதா மீதுநெல்லையில் வழக்கு பதிவு

திருநெல்வேலி, அக்.11-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்மனைவி மதுமிதா (28). பிரபல யூடியூபரான இவர் வீட்டில் பணம், நகைகள் இருப்பதாகக் காட்டி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் 118 பவுன்நகை கொள்ளை போனது. இதற்கிடையே, குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் நெல்லையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் பேச்சிமுத்து, தன்னிடம் இருந்து மதுமிதா 5 பவுன் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பவம் நடந்த இடம், புகார் அளித்தவர் நெல்லையைச் சேர்ந்தவர் என்பதால் பாளை தாலுகா காவல் நிலையத்துக்கு வழக்கை ராஜக்கமங்கலம் காவல்துறையினர் மாற்றினர். இது குறித்து காண்ட்ராக்டர் பேச்சிமுத்துவிடம் பாளை தாலுகா போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்மன் அனுப்பி யூடியூபர் மதுமிதாவிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தசரா திருவிழாவிற்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து: 11 பேர் காயம்

தூத்துக்குடி, அக்.11-தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கீழமுடிமண் பகுதியிலிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் குழுவினர் மாலை அணிவதற்காக வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். ஞாயிறன்று காலை 9 மணியளவில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில், கோவிந்தம்மாள் கல்லூரி அருகில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் வாகனத்தில் இருந்த ஒரு சிறுவன் மற்றும் ஓட்டுநர் உள்பட 11 நபர்கள் காயமடைந்தனர். அவர்களை

உடனடியாக மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, பலத்த காயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி : விண்ணப்பிக்க ஆணையர் அழைப்பு

தூத்துக்குடி, அக்.11-தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் ‘பிஎம் ஸ்வநிதி’ திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான ‘பிஎம் ஸ்வநிதி’ திட்டத்தினை விரைவாகச் செயல்படுத்துவது தொடர்பான வங்கியாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதன்மை வங்கி மேலாளர், நகர் நல அலுவலர், பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக ரூ.15,000 கடன் பெற்று அதனை முறையாகத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு, இரண்டாம் முறையாக ரூ.25,000 மற்றும் மூன்றாம் முறையாக ரூ.50,000 வங்கி மூலம் கடன் வழங்கப்படும். முதல் தவணை கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வங்கியின் மூலமாக கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் வியாபாரிகள் தங்களது வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கடன் உதவி வழங்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களையும் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரில் அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வேளாண்மை இணை இயக்குநர் அறிவிப்பு

திருநெல்வேலி, அக்.11-நெல்லை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க உள்ளதால், நெல்லை மாவட்ட விவசாயிகள் இந்த விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு: திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சிறப்பு ரொக்கப்பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், இப்பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடுபவராக இருக்க வேண்டும். மேலும் அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிர் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயியாக இருத்தல் அவசியம். குத்தகைதாரர்களும் இந்த பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள். போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட சன்ன நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.

விவசாயிகள் உரிய விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து பதிவுக் கட்டணமாக 150 ரூபாயை வட்டார வேளாண்மை உதவிஇயக்குநர்களிடம் செலுத்தி பதிவு செய்திட வேண்டும். இந்த பதிவு கட்டணம் திருப்பித்தரப்படமாட்டாது.விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்று ஆவணங்களான சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு

தூத்துக்குடி, அக்.11-தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் வருகைக் குறைவால் மீன்களின் விலை குறைந்தது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஞாயிறன்று துவங்கியது.

இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொது

மக்களின் வருகை குறைவாக காணப்பட்டது. மக்கள் வராததால் மீன்களின் விலை சரிவைக் கண்டுள்ளது.திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்கள் சனிக்கிழமை கரை திரும்பினர்.இதனிடையே, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதால், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கான பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதன் எதிரொலியாக வழக்கத்தைவிட மீன்களின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விளைமீன், ஊழி, பாறை உள்ளிட்ட மீன் வகைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டன. நண்டு கிலோ ரூ.600 வரையிலும்விற்பனையானது. கேரை மீன் கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டது.