திருநெல்வேலி விரைவு செய்திகள்
19 Aug 2026, 9:55 pm

விளாத்திகுளம் அருகே கல்லூரி பேருந்து மோதி கட்டிடத்தொழிலாளி பலி

தூத்துக்குடி,ஆக.19-விளாத்திகுளம் அருகே கல்லூரி பேருந்து மோதி கட்டிடத்தொழிலாளி பலியானார். தூத்துக்குடி மாவட்டம், புதூர் விநாயகர் நகரைச் சேர்ந்தவர் வரதராஜ் மகன் கருப்பசாமி (45), கட்டிடத்தொழிலாளி. இவர் விளாத்திகுளத்திற்கு கட்டிட வேலைக்காகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.அப்போது விளாத்திகுளத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்துமீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த புதூர் காவல்துறையினர், கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் தேவதாஸ் (63) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை நெல்லையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி ,ஆக 19-நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.நெல்லை மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி ஆட்சியர்அலுவலக வளாகத்தின் இரண்டாம் தள கூட்ட அரங்கில் காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில்அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்து தெரிவிக் கின்றனர்.இதில் எனவே, மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத் துறைஅலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.

பொது மக்களை அலட்சியப்படுத்தும் சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி

தென்காசி, ஆக. 19-பொது மக்களின் கேள்விகளுக்கு சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி செல்வி அலட்சியமாக பதிலளிப்பதாகவும், பொதுமக்களின் குறைகளை உரிய முறையில் கவனத்தில் கொள்ளாமல் செயல்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர்பி.உச்சிமாகாளி குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்

கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குபல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள்தங்களது சந்தேகங்கள் மற்றும் குறைகள் குறித்து வட்டாரப்போக்குவரத்து அதிகாரி செல்வியிடம் கேட்கும்போது, உரிய விளக்கம் அளிக்காமல் அலட்சியமாக பதில்அளிப்பதாகபுகார்கள் எழுந்துள்ளன.மேலும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு எதிரே இருக்கை வசதிஇருந்தபோதிலும், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை அந்தஇருக்கையில் அமர வைக்காமல் நிற்கவைத்தேகுறைகளை கேட்கிறார். பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் கனிவாகவும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். போக்குவரத்துத்துறை தொடர்பான நடைமுறைகள் குறித்துபொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிப்பதுடன், அவர்களின்குறைகளை உரிய முறையில் பரிசீலித்து தீர்வு காணநடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரியவிசாரணைநடத்தி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில்வலியுறுத்தியுள்ளார்.

கோவிலுக்குச் சென்ற வாலிபரிடம் தங்க நகை பறிப்பு

தூத்துக்குடி,ஆக.19-தூத்துக்குடி மாவட்டம் குறும்பூர் அருகேயுள்ள பூச்சிக்காட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரதுமகன்முத்துச்செல்வம் (26). இவர் தற்போது கோயம்புத்தூரில் உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வருகிறார்.சொந்த ஊருக்கு வந்த இவர், ஏரல் அருகே அமைந்துள்ள ஆறுமுகமங்கலம் சுடலை மாடசாமி கோயிலுக்குச் சாமிகும்பிடச் சென்றுள்ளார்.அங்குள்ள வாழைத்தோட்டப் பகுதிக்குச் சென்ற போது, மறைந்திருந்த அடையாளம்தெரியாத நபர் ஒருவர், முத்துச்செல்வத்தின் கழுத்தில்இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திடீரெனப்பறித்துக்கொண்டு தப்பியோடினார். இச்சம்பவம் குறித்துமுத்துச்செல்வம் கோயில் புறக்காவல் நிலையத்தில்புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையனைதேடி வருகின்றனர்.

நெல்லை: 87 அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி இல்லை ஆர்டிஐ மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

திருநெல்வேலி, ஆக. 19-நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்கும் 187 அரசு அலுவலகங்களில், 87 அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கான பணியிடப் பாலியல் தொல்லை தடுப்புக்குழுவான விசாகா கமிட்டியை அமைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகிஉள்ளது.

பணியிடங்களில் பெண்களுக்குஎதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கவும் 1997-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் விசாகா கமிட்டி நடைமுறைக்கு வந்தது. பின்னர் இது 2013-ல் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டமாக இயற்றப்பட்டது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் எந்த அரசு அல்லது தனியார் அலுவலகத்திலும் இந்தக் குழுவை அமைப்பது சட்டப்படி கட்டாயம். குழுவின் தலைவராக அதே அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த பெண் அதிகாரி இருக்க வேண்டும். உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு குறித்து நன்கு அறிந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ருவரோ அல்லது சட்ட ஆலோசகரோ கட்டாயம் இக்குழுவில் இடம்பெறவேண்டும். புகார்களை விசாரித்து,தவறு செய்தவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யும் சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் இந்தக் குழுவுக்கு உண்டு.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்கும் 187 அரசு அலுவலகங்களில், 87 அலுவலகங்களில் இந்த விசாகாகமிட்டியை அமைக்கவில்லை என்ற தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமானது. நெல்லை,வி.எம்.சத்திரம் வசி நகரைச் சேர்ந்த பிரம்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட சமூக நலஅலுவலகத்தில் மனு அளித்தார். நெல்லை ஆட்சியரின் கீழ் செயல்படும் அரசுத் துறையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா, கடந்த ஆண்டுகளில் பெறப்பட்டபுகார்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை அவர் கோரினார்.

இதற்கு மாவட்ட சமூக நல அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அளித்த பதிலில் பரபரப்புத் தகவல்கள் வெளியாயின. நெல்லை மாவட்டத்தில்ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 187 அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 100 அரசுஅலுவலகங்களில் மட்டுமே புகார்குழு அமைந்துளது. மீதமுள்ள 87அரசு அலுவலகங்களில் 2020 முதல் 025 வரை பாலியல் தொல்லை தடுப்புக்கான புகார் குழு எதுவும்அமைக்கவில்லை என அலுவலர் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட புகார்கள் எத்தனை என்றகேள்விக்கு, அரசு அலுவலகங்களில் இருந்து எவ்வித அறிக்கையும் பெறவில்லை என பதிலளித்தார். பெண்களின்பாதுகாப்புக்காக சட்டப்பூர்வமாக அமைக்கப்பட வேண்டிய இந்தக் குழுவை, நெல்லை மாவட்டத்தில் உள்ள 87 அரசு அலுவலகங்கள் ஐந்தாண்டுகளாக அமைக்காதது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.