தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

4 Nov 2026, 10:14 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.91 கோடி

தூத்துக்குடி,நவ.4-திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ. 2.91 கோடி ரொக்கமும், 640 கிராம் தங்கமும் பெறப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் மாதம் தோறும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவில் நிர்வாக அலுவலக அரங்கில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமை வகித்து உண்டியல் எண்ணும் பணியைப் பார்வையிட்டார்.

உண்டியல் எண்ணப்பட்டதில் பெறப்பட்ட காணிக்கைகளின் முழு விவரம்: ரொக்கப் பணம் ரூ. 2,91,05,513, தங்கம் 640 கிராம், வெள்ளி 12,228 கிராம், பித்தளை 31,050 கிராம், செம்பு: 3,940 கிராம், தகரம்: 6,800 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,261 நோட்டுகள் இருந்தன.

இந்நிகழ்வில் இணை ஆணையர் அருணாசலம், அறங்காவலர்கள் ,துணை ஆணையர்கள் யக்ஞ நாராயணன், கவிதா, உதவி ஆணையர் லோகநாதன், உள்ளிட்ட கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காரில் கடத்திய 243 கிலோ புகையிலையுடன் 2 பேர் கைது

தூத்துக்குடி,நவ.4-தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அச்சோதனையில், காரில் சட்டவிரோத விற்பனைக்காகத் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் கருப்பசாமி (42) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸன் அலி மகன் அம்மர் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 243 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் ரொக்கப் பணம் ரூ.2,75,800 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான இருவர் மீதும் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : கொடுத்த ஜவுளி ஒருவர் கைது

தூத்துக்குடி,நவ.4-தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வீரமணிகண்டன் (43). இவர் கார் மூலம் கிராமப் பகுதிகளுக்குச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் கயத்தாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரிடம் சுடிதார் அளவு பார்ப்பது போல நடித்து, வீரமணிகண்டன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உடனடியாக இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கயத்தாறு போலீசார், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஜவுளி வியாபாரி வீரமணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் நகை கொள்ளை

தூத்துக்குடி,நவ.4-தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவரது மனைவி பாப்பா (65). கடந்த 1-ஆம் தேதி அன்று இவர், மறவன்மடம் அருகே உள்ள சர்ச்சுக்குப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் மெயின் கேட் மற்றும் உள்பகுதி கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த செயின், கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 3 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.இச்சம்பவம் குறித்து பாப்பா தட்டாம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நவ.13 தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம்

தூத்துக்குடி,நவ.4-தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவம்பர் 13-ஆம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புவேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ‘Youth4Jobs Foundation’ ஆகியவை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

18 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் மற்றும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ITI, Diploma, பட்டப்படிப்பு முடித்தவர்கள்இம்முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களுக்கு 9281147009 / 9281439353 ஆகியஎண்களைத் தொடர்புகொள்ளலாம். காது கேளாதோருக்கான வீடியோ கால் உதவிக்கு 9281147010 என்ற எண்ணைத்தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.