திருநெல்வேலி விரைவு செய்திகள்
7 Oct 2026, 9:59 pm

தூத்துக்குடியில் மளிகைக் கடையில் தீ விபத்து ரூ.2 கோடியில் பொருட்கள் நாசம்

தூத்துக்குடி,அக்.7-தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலு மகன் குருசாமி (45). இவர் பழைய பேருந்து நிலையம் அருகே மீனாட்சிபுரம் மெயின் ரோட்டில் மொத்த மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். செவ்வாயன்று இரவு 11 மணியளவில் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நள்ளிரவு 12.40 மணியளவில் இவரது கடையிலிருந்து புகை வருவதாக குருசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் வந்து பார்த்த போது கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.தகவலின்பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.1கோடி மதிப்பிலான மொத்த மளிகை பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து பயணிகள் உயிர் தப்பினர்

தூத்துக்குடி,அக்.7-தூத்துக்குடியில், தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு புதனன்று காலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்றுவந்துகொண்டிருந்தது. இப்பேருந்தில் 6 பயணிகள் பயணித்தனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (30)என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். இப்பேருந்து தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, சங்கரப்பேரி விலக்கு சாலை அருகேவந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக்கவிழ்ந்தது.

இவ்விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் 6 பேருக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம்குறித்துத் தகவலறிந்த சிப்காட் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து, நடுரோட்டில் கவிழ்ந்துகிடந்தபேருந்தைக் கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாகச் சிப்காட்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரியவிலை கிடைக்காமல் நஷ்டம் : கடலுக்குச் செல்லாத மீனவர்கள்

தூத்துக்குடி,அக்.7-தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினசரி சுழற்சி முறையில் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றுமீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீன்களை தூத்துக்குடி மற்றும் கேரளா மீன் வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் எடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக கேரள மீன் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது.மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் புதனன்றுதூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாலாட்டின்புத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

தூத்துக்குடி,அக்.7-நாலாட்டின்புத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். தூத்துக்குடி மாவட்டம் மாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரது மகன் தங்கபாண்டியன் (45).

இவர் தனது பைக்கில் திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது.இவ்விபத்தில்பலத்த காயமடைந்த தங்கபாண்டியனை மீட்டு, சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இதுதொடர்பாக லாரியை ஓட்டி வந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் கோபிநாத் (29)என்பவர் மீது நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில் லாரி மோதி சைக்கிளில் சென்றவர் பலி

தூத்துக்குடி,அக்.7- கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் குருசாமியின் மகன்மூர்த்தி (48). இவர் புதனன்று கோவில்பட்டி புது ரோட்டில் இருந்து தனது சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்அருகே எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது,எதிரே வந்த டிப்பர் லாரி சைக்கிளில் மோதியது.இதில் மூர்த்தி நிலைதடுமாறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலைக்கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி கீழக்கரந்தையைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கண்ணன் (22) என்பவரிடம்விசாரணை நடத்தி வருகின்றனர்.

த.வெ.க. எம்எல்ஏவின் புதிய மதுக்கடையை பொதுமக்கள் முற்றுகை மீறி திறந்தால் மறியலில் ஈடுபடுவோம் என அறிவிப்பு

தூத்துக்குடி,அக்.7-தூத்துக்குடி குறிஞ்சி நகரில் புதிய மதுபானக் கடை அமைக்க எதிர்ப்புதெரிவித்து அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடையை முற்றுகையிட்டனர்.

குறிஞ்சிநகர் பகுதியில் புதிய தனியார் பாருடன் கூடிய மதுக்கடை திறப்பதற்கான பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகின்றன. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், 14-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகரத்திமுக துணைச் செயலாளருமான கீதா முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும்ஆண்கள்திரண்டு வந்து, திறக்கப்படவுள்ள மதுக்கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்குச் சொந்தமாக இந்தத் தனியார் பாருடன் கூடிய மதுக்கடை அமையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இப்பகுதியில் கோவில், பள்ளிக்கூடம், மருத்துவமனை, ரேசன் கடைஆகியவை உள்ளன. பெண்கள் அதிகளவில் நடமாடும் இந்த இடத்தில் மதுக்கடை அமைந்தால் வழிப்பறி உள்ளிட்டகுற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும்.

ஏற்கனவே போராடி ஒரு கடையை அப்புறப்படுத்திய நிலையில், மீண்டும் இங்குமதுக்கடை திறக்க அனுமதிக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மீறித் திறக்க முயன்றால்சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.10 ஆயிரம் வரை நகைக்கடன்

திருநெல்வேலி, அக். 7-கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.10,000 வரை நகைக்கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவுநிறுவனங்களில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நகைக்கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12-ல் இருந்து 13 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 7,000எனவும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு

மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75 சதவீதம் வரையும் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு துறை முக்கிய கூட்டத்தொடரில் நகைக்

படன்களுக்கு ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 10,000 அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றிமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நகைக்கடன்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக்கடன் வட்டியை விட குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் லாப வரம்பு 2.25 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது புதிதாக வழங்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் நகைக்கடன்களுக்கு முழுமையாகப் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.