திருநெல்வேலி விரைவு செய்திகள்
1 Jun 2026, 11:01 pm

பாலியல் புகார் எதிரொலி: இன்ஸ்பெக்டர் திலீபன் சஸ்பெண்ட்

ஆறுமுகநேரி, ஜூன் 1: பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் எதிரொலியாக, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திலீபனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், அங்குப் பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்துத் தட்டிக்கேட்க வந்த அந்தப் பெண் காவலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஆய்வாளர் திலீபன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “என் மீதான செய்தி கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. தவறு செய்யும் போது காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கண்டித்துள்ளேனே தவிர, எவ்விதமான பாலியல் அச்சுறுத்தலும் தரவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், இப்புகார் தொடர்பாகத் தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

மெய்ஞானபுரம், ஜூன் 1- தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள நங்கைமொழி கிராமத்தைச் சேர்ந்த முத்து (70), ஆடுகளை வளர்த்துத் தொழில் செய்து வந்தார். இவர் நங்கைமொழியிலிருந்து மெஞ்ஞானபுரத்திற்குத் தனது சைக்கிளில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அவர் பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாகச் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டுச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்த னர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக் காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த முத்து, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை

குரும்பூர், ஜூன் 1- தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த முருகன் (38), பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்குச் சந்தனமாரி (30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செவிலியராகப் பணிபுரியும் மனைவிக்கும் முருகனுக்கும் இடையே குடும்ப விவகாரங்கள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலையும் தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனைவி வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த முருகன், மது போதையில் அங்கிருந்த ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்துள்ளார். அவ்வழியாகச் சென்ற அவரது நண்பர் அளித்த தகவலின் பேரில், முருகனின் உறவினர்கள் விரைந்து வந்து ஆற்றில் கிடந்த அவரை மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

தூத்துக்குடி, ஜூன் 1: தூத்துக்குடியில் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக முன்னாள் தர்மகர்த்தாவை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மூவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முத்தையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் (70), அப்பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் தர்மகர்த்தாவாகப் பொறுப்பு வகித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு சங்கர் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியிலிருந்து விலகியுள்ளார். இருப்பினும் இருதரப்பிற்கும் இடையே தீவிர முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், வரவிருக்கும் ஆவணி மாத கொடை விழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஞாயிறு இரவு முத்தையாபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு கணேசன் நின்றுகொண்டிருந்தபோது, பிரபு சங்கரின் ஆதரவாளர்களான பொன்ராஜ் (25), இசக்கி (22) உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கணேசனைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. பலத்த காயமடைந்த கணேசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்தையாபுரம் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தப்பியோடிய முதன்மை குற்றவாளிகளான பொன்ராஜ் மற்றும் இசக்கி ஆகிய இருவரையும் அடுத்த 10 நிமிடங்களிலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனையில் 150 சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு அமைச்சரிடம் நுகர்வோர் அமைப்பு மனு

தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடங்கியுள்ள 150 கண்காணிப்பு கேமராக்களை உடனடியாகச் சீர மைக்கக் கோரி, ‘எம்பவர் இந்தியா’ நுகர்வோர் அமைப்பு சார்பில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘எம்பவர் இந்தியா’ நுகர்வோர் கல்வி, ஆராய்ச்சி மையச் செயல் இயக்குனர் ஆ. சங்கர் அளித்துள்ள மனுவில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் தற்போது முற்றிலும் செயலிழந் துள்ளன. மாநிலத்தின் பதற்றமான நகரங்களில் ஒன்றாகத் தூத்துக்குடி கருதப்படுவதால், மருத்துவமனை வளாகத்தின் இந்த அவலநிலை பாதுகாப்புக்குப் பெரும் பின்னடை வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நோயாளிகள் மற்றும் ஊழியர்க ளின் பாதுகாப்பைக் கருதி, இவற்றை மிகக் கூடிய விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்” எனக் கோரப் பட்டுள்ளது. மேலும், வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனைக்குத் தங்கு தடையற்ற மின்சார விநியோ கத்தை உறுதி செய்யச் சூரிய ஆற்றல் (Solar) வசதியை உரு வாக்கத் தேவையான நிதி ஒதுக் கீட்டைப் பெற்றுத் தரவும், மக்கள் சேவையை மேம்படுத்தும் நோக்கில் நோயாளி நலச் சங்கத் திற்கான புதிய நிர்வாகக் குழுவை உடனடியாக அமைக்கவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொலை குற்றங்களைத் தடுக்க அரசு மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை

தென்காசி, ஜூன் 1- தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவரும் மாநில செயலாளரு மான டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமை யில், மாவட்ட பொருளாளர் டாக்டர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டாக்டர்.செந்தில் சேகர், மாவட்டச் செய லாளர் டாக்டர் முகமது இப்ராகிம் , துணைத் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி, இணைச் செய லாளர்கள் டாக்டர் திருமலை குமார், டாக்டர் கார்த்திக் அறிவுடை நம்பி, மற்றும் மருத்து வர்கள் தேவி கற்பூரநாயகி, சங்கரி, செல்வ பாலா, நிர்மல் , ராஜேஷ், பாலகணேஷ், உமா மகேஸ்வரி, அபிநயா, முகேஷ், நசீம் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலி யல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன் கொடுமை கொலைகள் ஆகியவற்றை தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வன்மையாக கண்டிப்ப தோடு, அரசுக்கு பின்வரும் வேண்டு கோளை வைக்கிறது. பாலியல் கொடும் குற்றச் செயல்கள், பாலியல் வன்கொ டுமை மற்றும் கொலை செய்யப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளை உடல் கூராய்வு செய்யும் மருத்துவர்கள் சொல்லொண்ணா துயரம் அடைகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, இதனை முழுவதுமாக நிறுத்த அரசு கடுமையான சட்டங்கள் ஏற்று வது இக்காலத்திற்கு மிகவும் தேவையான தாக உள்ளது என அனைத்து அரசு மருத்து வர்களும் கருதுகின்றனர். பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு, நீதிமன்ற வழங்கும் தீர்ப்போடு சேர்த்து, அவர்க ளின் ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக நீக்குவது குறித்து சட்டம் இயற்ற தமிழக அரசை கேட்டுக்கொள்வ தாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.