திருநெல்வேலி விரைவு செய்திகள்
26 May 2026, 9:53 pm

11 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது

நாகர்கோவில்,மே 26 - குமரி மாவட்டம், இரணியல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இரணியல் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பண்டாரக்காடு பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் சபிந்திரன்(46) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியரின் அறையை உடைத்து 16 மடிக்கணினிகள் திருட்டு

நாகர்கோவில்,மே 26- குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு தலைமை ஆசிரியரின் அறையை உடைத்து, 16 மடிக்கணினிகள், சிசிடிவி, ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து, திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மக்கள் குறைகள் தீர்க்க இலவச எண் அறிமுகம்

தூத்துக்குடி, மே 27- தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சேவைகள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில், ஏதேனும் குறைகள் அல்லது புகார்கள் இருந்தால் அவற்றை உடனடியாக பதிவு செய்ய 1800 203 0401 என்ற டோல் ஃப்ரீ உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இலவச எண்ணை தொடர்பு கொண்டு தங்களது தேவைகள் மற்றும் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

வெள்ளை கத்தரிக்காய் விலை 140 ரூபாயாக உயர்வு

திருநெல்வேலி, மே 26- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளை கத்தரிக்காய் விலை கடும் விலையேற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி கத்தரிக்காய் குழம்புக் கான தேவையை ஈடுகட்ட முடியாமல் வியாபாரிகள் திண்டாடி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. அதிலும் உள்ளூர் காய்கறிகளான கத்த ரிக்காய், தக்காளி போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. மானூர், கரிசல்குளம், ஆலங்குளம், பாவூர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்து மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவிலேயே உள்ளது. இதன் காரணமாக கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது. திங்களன்று ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.72 முதல் ரூ.75 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில், செவ்வாயன்று அதன் விலை திடீரென உயர்ந்து கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரித்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு கத்திரிக்காய்க்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150 வரையிலும், அவரைக்காய் ரூ.130 முதல் ரூ.140 வரையிலும், எலுமிச்சை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரையி லும், இஞ்சி ரூ.130 முதல் ரூ.160 வரையிலும் விற்பனை யாகி வருகிறது. ஜூன் மாதத்திற்கு பின்னர் காய்கறி கள் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரி வித்துள்ளனர்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

தேனி, மே 26- பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரியகுளத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். திங்கள்கிழமை, தென்கரையில் உள்ள ஒரு கறிக்கடையில் பணிபுரியும் அயூப்கானின் மகன் அஜ்மீர் காஜா (38), சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் தாய், தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் முத்துபிரேம்சந்த், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜ்மீர் காஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

வீட்டில் வெடிபொருள்களை பதுக்கிய பாஜக நபர் உட்பட 2 பேர் கைது

குழித்துறை, மே 26- களியக்காவிளை அருகே வீட்டில் டெட்டனே ட்டர், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்த களி யக்காவிளை பேரூராட்சி பாஜக உறுப்பினரை போலீ சார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட் டம், களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகு தியைச் சேர்ந்தவர் குண சீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14 ஆவது வார்டு பாஜக உறுப்பினராக உள்ளார். இவர் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வரு வதுடன் பாறை உடைக்கும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும், கிணறு தோண்டும் பணியும் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப் படை போலீஸார் அங்கு சென்று சோதனை செய்த னர். இதைத்தொடர்ந்து குண சீலனின் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் பின் புறம் 27 டெட்டனேட்டர்கள், 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருள் கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. இதுகுறித்து களியக்கா விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குணசீலன் மற்றும் அவருக்கு வெடி பொருள்களை விற்பனை செய்த பனச்சமூடு பகுதி யைச் சேர்ந்த ராஜன் (75) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

காவல் நிலைய ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

தூத்துக்குடி, மே 26- தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் கோமுராஜ் மகன் பிரம்மநாயகம் (35). இவர் சிப்காட் காவல் நிலையத்தில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். திங்களன்று இரவு பிரம்மநாயகம், எட்டயபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் ஒயின்ஷாப் வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு சிலர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட பிரம்மநாயகம், உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த தகராறைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் பிரம்மநாயகத்தை கொடூரமாகத் தாக்கினர். இதில் பிரம்மநாயகத்தின் தலையின் பின்புறத்தில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பிரம்மநாயகத்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி நடராஜ புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சிவா (எ) சிவலிங்கம் (33), கந்தசாமிபுரம் ஜேசு மகன் யாக்கோபு (30), போல்பேட்டை கிழக்குத் தெரு ஆண்டியப்பன் மகன் கண்ணன் (33), திரவியபுரம் ஜின்னா மகன் காதர் அலி மீரான் (32) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

தென்காசி, மே 26- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த நபருக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது தந்தை கோவை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தாய் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முருகன் (62) அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது பற்றி சிறுமியின் தாயார் சங்கரன் கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விசாரணை அதிகாரி வேளாங்கண்ணி உதயரேகா புலன் விசாரணை நடத்தி யதை தொடர்ந்து போலீசார் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேல் முன்னிலையில் நடை பெற்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி முருகனுக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி பி.ராஜவேல் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்க றிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.

குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை-உபயோகம் கூடாது வியாபாரிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்

தென்காசி, மே - 26 தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய் வுக் கூட்ட அறிவுரையின்படி தென்காசி மாவட்டம் குற்றா லம் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சாலையோர வியா பாரிகள் கடைகள் ,தங்கும் விடுதிகள், ஓட்டல் உரிமை யாளர்கள் ,குத்தகைதா ரர்கள் மற்றும் குற்றாலம் பேரூராட்சி பொது மக்க ளுக்கான கூட்டம் குற்றாலம் கலைவாணர் கலைய ரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குற் றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் குற்றாலம் பேரூராட்சியில் சீசன் காலம் துவங்க உள்ள தை முன்னிட்டு பேரூ ராட்சி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என்றும் மேலும் வணிக நிறுவனங் கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளில் பிளா ஸ்டிக் பொருட்கள் உபயோ கம் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் வன அலுவலர் பேசுகையில், வன பகுதி களுக்குள் செல்லும் சுற்று லா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லவோ பயன்படுத்த வோ கூடாது. மீறி பயன் படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது பேரூ ராட்சி நிர்வாகம் மூலம் உரிய சட்ட விதிகளின்படி நட வடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் திருநெல்வேலி, மே 26- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட அணைகளுக்கு குறை ந்த அளவில் நீர்வரத்து தொடர்ந்து கிடைத்து வருகிறது. மே 26 செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 44.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 135.8 கனஅடி நீர் வரத்து உள்ளது. 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வ லாறு அணையின் நீர்மட்டம் 57.68 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் எதுவும் இல்லை. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 58.23 கனஅடி நீர் வரத்து கிடைத்து வரும் நிலையில், 332.50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 6 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. நம்பியாறு அணையில் 14 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. கொடுமுடியாறு அணையில் 4 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கனஅடி நீர் வரத்து கிடைத்து வரும் நிலையில், அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையில், மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது. மாஞ்சோலையில் 4 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 8 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 11 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.