தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

15 Jul 2026, 10:37 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

கொட்டாரம் அருகே கோயில்களில் உண்டியல் ,சிசிடிவி கேமரா திருட்டு

நாகர்கோவில், ஜூலை 15- கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே இரண்டு கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள், சிசிடிவி கேமராவையும் திருடி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

குழித்துறை, ஜூலை 16- மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியானார். குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே பாகோடை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் சிஜின் (27),கட்டிடத்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஞாறாம் விளையிலிருந்து குருவிக்காட்டுவிளை செல்லும் சாலை யில் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்பொழுது அதி வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்தி லேயே பலியானார் . இதுகுறித்து அஜின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுநரான வென்டெலிகோடு பகுதியைச் சேர்ந்த மணி கண்டன் ( 50) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆழ்வார்திருநகரியில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

தூத்துக்குடி,ஜூலை 15- நெல்லை மாவட்டம் இடிந்தகரை மேல தெருவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் தொம்மை சேசுராஜ் (53), கூலித் தொழிலாளி ஆவார். இடிந்தகரையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இவர் சென்று கொண்டிருந்தார். ஆழ்வார்திருநகரி தெப்பக் குளத்தின் அருகில் சென்ற போது, எதிரே வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தக் காயமடைந்த தொம்மை சேசுராஜை பொதுமக்கள் மீட்டு, அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த முகாம் மருத்துவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தார். இவ்விபத்து குறித்துத் தகவல் அறிந்த ஆழ்வார்திரு நகரி காவல்துறையினர் ஆரம்பச் சுகாதார நிலை யத்திற்குச் சென்று, உயிரிழந்தவரின் உடலைக் கைப் பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநரான ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த குற்றாலிங்கம் மகன் சேர்மதுரை (26) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோலார் கேமரா திருட்டு

நத்தம், ஜூலை 15- மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் இன்னா முல்ஹசன் (29). இவர் நத்தம் அருகே பரளிபுதூரில் தோட்டம் ஒன்று வாங்கி பராமரித்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் எனக்கும் பங்கு என கூறி மதுரையைச் சேர்ந்த ஷாஜகான், இன்னாமுல்ஹச னுடன் பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி இன்னாமுல்ஹசன் தோட்டத்திற்கு வந்த போது அங்கிருந்த சோலார் கேமரா திருடு போயி ருந்தது. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவர் தற்கொலை

தூத்துக்குடி,ஜூலை 15- தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3-வது தெரு மத்திய பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் நவநீத பிரபு (38). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் அரசு மருத்துவரா கப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூர்ணிமா குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் நவநீத பிரபு தனது மனைவி பூர்ணிமாவுடன் செல்போனில் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது தான் தூக்கிட்டுத் தற் கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பூர்ணிமா, உடனடியாக நவநீத பிரபுவுடன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சக மயக்கவியல் மருத்துவர் அருள் செல்வத்திற்குச் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அருள் செல்வம் மற்றும் சக மருத்துவர்கள் பிரையண்ட் நகரில் உள்ள நவநீத பிரபுவின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கிரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நவநீத பிரபு வீட்டிலிருந்த சேலையால் மின்விசிறி யில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தென்பாகம் காவல்துறையினர், நவநீத பிரபுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.