திருநெல்வேலி விரைவு செய்திகள்
23 Sept 2026, 9:09 pm

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கல்

தென்காசி, செப். 23-தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2026–27ஆம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணை அலகு நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர், தங்களது கிராமத்திற்குட்பட்ட அரசு கால்நடை மருந்தகத்தைஅணுகி, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் பெற்று, தேவையான ஆவணங்களுடன்விண்ணப்பிக்கலாம்.பண்ணையை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிப்பதாக உறுதியளிக்க வேண்டும்.தேசியமயமாக்கப்பட்ட வங்கி, திட்டமிடப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கி மூலம் நிதியுதவி பெறுவதற்கான தகுதி இருக்க வேண்டும். அல்லது சொந்த முதலீட்டில் பண்ணை அமைக்க விரும்புவோர், அதற்கான நிதி ஆதாரம் மற்றும் நிதித்திறனை நிரூபிக்கும் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்எனவே, மேற்கண்ட தகுதிகளைப் பெற்ற நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள கிராமப்புற பொதுமக்கள், தாமதமின்றி தங்களது பகுதி அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பித்து, இத்திட்டத்தின் மூலம்பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர்கள் கைது

தென்காசி, செப். 23-தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துஉள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனத்திற்கு பெங்களூருவில் இருந்து பழைய துணியுடன் கூடிய பார்சலில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து மேற்படி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் பெங்களூரில் இருந்து அனுப்பிய சின்னகாளாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (வயது 30), பார்சல் வாங்க வந்த சின்னகாளாம்பட்டியை சேர்ந்த தனசேகர் (வயது 32) மற்றும் சங்குப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் (வயது 48) ஆகிய 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தனசேகர் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவரிடம் இருந்து 52 கிலோ எடை கொண்ட 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 5ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிரில் ஒர்க்ஸ் கடையில் தீ விபத்துரூ.5 லட்சத்தில் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி, செப்.23-திருச்செந்தூரில் கிரில் ஒர்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும்பொருட்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த சுமன் என்பவர், திருச்செந்தூர் அரசுப்

போக்குவரத்து பணிமனைக்கு எதிரே கடந்த 20 ஆண்டுகளாகக் ‘கிரில் ஒர்க்ஸ்’ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கடையில் பணிகள் நடைபெற்று வந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டது. இதனால் கடையில் வைக்கப்பட்டிருந்த பெயிண்ட், டின்னர் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றில் தீப்பொறி பட்டுத் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.கடையிலிருந்து தீ கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவி, அங்கிருந்த இயந்திரங்கள் மீது பிடித்துக் கடை முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாக மாறியது. தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், போராடித் தீயை முழுமையாக அணைத்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான கிரில் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் முற்றிலும் தீயில் கருகிச் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ரூ.17.5 கோடியில் திட்டப் பணிகள்தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

தூத்துக்குடி, செப்.23-திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ நிலையத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடி மதிப்பீட்டில்நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளைத் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கில் ‘அம்ரித் பாரத்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்கும்வகையிலும் ரூ. 17.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், பயணிகள் அமரும் இடங்கள், நடைமேடைகள் புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்கல் பணிகளைத் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த அவர், பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்குஅறிவுறுத்தினார்.

1-ஆம் எண் புயல் எச்சரிக்கை தூத்துக்குடி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி, செப்.23- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதை அடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதிவிசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாகக் கடலுக்குச் செல்லவில்லை.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துஉள்ளது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும். தொடர்ந்து நகர்ந்து புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலையில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்வகையில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுஉள்ளது.கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் புதனன்று 2-வது நாளாகக் துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பைக் மீது கல்லூரி பேருந்து மோதி ஒருவர் பலி

தூத்துக்குடி, செப்.23-தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் வேல்முருகன் (56). இவர் தனது பைக்கில் இளையரசனேந்தல் சாலை, டைமண்ட் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து எதிர்பாராதவிதமாக வேல்முருகனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் , வேல்முருகனின் உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பேருந்து ஓட்டுநரான சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சீதாபதி (52) என்பவர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

நெல்லையில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

திருநெல்வேலி, செப்.23 தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.இதைடுத்து, இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பரவலை தடுக்கவும், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் நெல்லை அரசு மருத்துவமனையில்அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் டீன் செல்வராகஜன் தலைமையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கொசுக்கடி மூலம் நோய் பரவாமல் இருக்க ஒவ்வொரு படுக்கையிலும் கொசு வலைகள் கட்டப்பட்டுள்ளன.

தற்போது வரை நெல்லை அரசு மருத்துவமனையில் 17 பேர் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேருக்கு டெங்கு அறிகுறி இருந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று தெரிவித்தனர்.