திருநெல்வேலி விரைவு செய்திகள்
19 Jul 2026, 10:19 pm

குலசேகரன்பட்டினம் கோவில் ஆடி கொடை விழா ஆக.3 இல் துவக்கம்

தூத்துக்குடி, ஜூலை 19- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடை பெறும் ஆடி கொடை விழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் ஆடி கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். விழாவின் முதல் நாளான ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தென்காசி சத்யா–செல்வின் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 8 மணி மற்றும் பகல் 12 மணிக்கு அன்னதானம், காலை 11 மணிக்கு கும்பம் வீதி உலா, காலை 11.30 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும். விழாவையொட்டி தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ஆம் தேதி அதி காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் உச்ச நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுவதால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

தென்காசி அருகே வாலிபர் வெட்டிக் கொலை

தென்காசி, ஜூலை 19- தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரம் அடுத்த சடையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சர வணகுமார் (வயது 23). இவர் தந்தையுடன் விவசாயப் பணிகளை செய்து வந்தார். இவர்களுக்கு 20 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் தந்தையுடன் இரவு நேரத்தில் வயல் களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பொழுது வந்த கும்பல் ஒன்று மோட்டார் ரூமுக்குள் நுழைந்து சரவண குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். முன்னதாக சங்கர் என்பவரை கொலை செய்வதற்காக சென்றபொழுது அவர் அங்கே இல்லாததால் , ஆட்டை வெட்டி விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றதாக கூறப்படு கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வரு கிறார்கள்.

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

குழித்துறை, ஜூலை 19- மார்த்தாண்டத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணிட மிருந்து நகை திருடப்பட்டது. குமரி மாவட்டம், சூரியகோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் குமார் மனைவி சோனியா (வயது 28). சம்ப வத்தன்று இவர் தனது குழந்தை மற்றும் அம்மாவுடன் மார்த்தாண்டத்திலிருந்து செங்கவிளை செல்வதற்காக வள்ளவிளை செல்லும் பேருந்தில் ஏறினர். பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி யாரோ ஒரு நபர் சோனியா கழுத்தில் கிடந்த 8 கிராம் தங்க செயினை திருடினார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பெயரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

திருநெல்வேலி, ஜூலை 19- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மணிகண்டன் (21). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் ,மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்துள்ளார். அந்த சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி யுள்ளார். இந்நிலையில் சிறுமி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், மணிமுத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அதில், மணிகண்டன் சிறுமியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தேடி கண்டுபிடித்து இரு வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீ சார், சிறுமியைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மணிகண்டன் அந்தச் சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதை யடுத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தென்காசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.1.83 லட்சம் கண்டுபிடிப்பு

தென்காசி, ஜூலை 19 - தென்காசி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெள்ளியன்று நடத்திய அதிரடி சோதனையில் தாசில்தார் உட்பட பணி யாளர்களின் கணக்கில் ரூ.1.83 லட்சம் பணம் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது. தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி.பால்சந்தர் தலைமையிலான குழுவி னர் தென்காசி தாலுகா அலுவலக வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது தாசில்தார் அரிஹர னிடம் இருந்து ரூ.10 ஆயிரமும், உதவியாளரி டமிருந்து ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.15 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலகத்து பணியாளர்களின் ஜி.பே கணக்குகளை சோதனை மேற்கொண் டனர். சோதனையில் தென்காசி தாசில்தார் கணக் கில் ரூ.50 ஆயிரம், தாட்கோ மாவட்டமேலாளர் கணக்கில் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 200 என மொத்தம் ரூ.1,68,200 கணக்கில் வராத பணப் பரிவர்தனை நடைபெற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். விசாரணை அடிப்படையில் நடத்தப் பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் ரூ.32,200 பறிமுதல்

திருநெல்வேலி, ஜூலை 19- நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான ட போலீசார் வெள்ளிக்கிழமை மாலை திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் சோதனை நடத்தி னர். திசையன்விளை தாசில்தார் ரமேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் மேல் மாடியில் அமர வைக்கப் பட்டிருந்த அலுவலக ஊழியர்களை ஒவ்வொருவராக கீழே அழைத்து அதிகாரி கள் விசாரணையை மேற்கொண்டனர். மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களி லும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்ட னர். சுமார் 4 மணி நேரம் நீடித்த சோதனை யின் முடிவில் தாசில்தார் ரமேஷ் மற்றும் ஊழி யர்களிடமிருந்து கணக்கில் வராத சுமார் ரூ.32,200 பிடிபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாய்தாவுக்கு வந்தவர் கொலை வழக்கில் பிறழ் சாட்சிகளால் 15 பேர் விடுதலைநெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

திருநெல்வேலி, ஜூலை 19 – சேரன்மகாதேவியை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி. இவரது சகோதரர் கணேசன். சென்னையில் தங்கியிருந்த கணேசன் கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு நெல்லையில் வாய்தாவிற்கு ஆஜராகி வந்தார். கடந்த 2023 ஆகஸ்ட் 28 அன்று நெல்லை நீதிமன்றத்திற்கு வாய்தாவுக்கு வந்துவிட்டு சென்னை செல்வதற்காக கணேசன் மோட்டார் சைக்கிளில் தருவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிராஜ் உள்பட 15 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கின் விசாரணை நெல்லை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கதிரவன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் மொத்தம் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 74 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் அரசு தரப்பில் சம்பவத்தை நேரில் பார்த்ததாக விசாரிக்கப்பட்ட புகார்தாரர் மாரிச்சாமி, வீரவல்ல பாண்டியன், செல்வம் மற்றும் நடராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சிகளாக மாறினர். மேலும் போலீசாரால் விசாரிக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளான ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சாட்சிகளும் அரசு தரப்புக்கு விரோதமாகவே சாட்சியம் அளித்தனர். சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறிய காரணத்தால், குற்றம் சாட்டப்பட்ட மாரிராஜ் உள்ளிட்ட 15 பேரையும் விடுதலை செய்து நீதிபதி கதிரவன் தீர்ப்பளித்தார்.

பழுதான செல்போனை சரிசெய்து தராத கடைக்கு ரூ.43 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

திருநெல்வேலி, ஜூலை 19– நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மேல இலந்தைகுளம் ஆலய தெருவை சேர்ந்தவர் மணி பாண்டியன் ( 40). இவர் நெல்லை சந்திப்பு பகுதி யில் உள்ள மொபைல் கடை யில் கடந்த ஆண்டு செல்போன் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ரூ.23 ஆயிரத்துக்கு வாங்கினார். வாங்கிய சில நாட்களி லேயே அந்த செல்போனில் சத்தம் சரியாக கேட்க வில்லை. அடிக்கடி செல்போன் இயங்காமல் பழுதானது. மேலும் சார்ஜ் நிற்காமலும், தொடுதிரை சரிவர வேலை செய்யா மலும் பழுதானதோடு அவர் வாங்கிய பவர் பேங்க்கும் செயல்படவில்லை. வாரண்டி இருந்ததால் பழு தான செல்போன் மற்றும் பவர் பேங்க்குகளை பாளை யங்கோட்டையில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் மணி பாண்டியன் கொடுத்தார். ஆனால் அவர்கள் பழுதை நீக்கி தரவில்லை. பலமுறை கேட்டும் செல் போனை திருப்பி தராமல் சர்வீஸ் சென்டர் ஊழி யர்களும், செல்போன் கடை நிர்வாகமும் அவரை தொ டர்ந்து அலைக்கழித்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மணிபாண்டியன் இதுகுறித்து நெல்லை மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா ரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கி யது. அதில், சேவை குறை பாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய மொபைல் கடை மற்றும் சர்வீஸ் சென்டர் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வாடிக்கையாளரான மணி பாண்டியனுக்கு செல்போன் தொகையான ரூ.23 ஆயி ரத்தை 6.5 சதவிகித வட்டி யுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம், வழக்கு செல வாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.43 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பளித் தது.