தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

25 Sept 2026, 9:49 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

காலங்கரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தென்காசி, செப்.25-தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், காலங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் கணிசமான அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் நிலையில்,காலங்கரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக தென்காசியில் கோட்ட அளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ராஜகோபால் மனு அளித்தார்.அந்த மனுவில், காலங்கரை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், விவசாயிகள் தங்களது நெல்லை தொலைதூரப் பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியநிலை உள்ளது. இதனால் போக்குவரத்துச் செலவு, காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்துவருகின்றனர்.

மேலும், அறுவடை காலங்களில் நெல்லை உடனடியாக விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, தனியார் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, காலங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் சாகுபடி நிலங்களைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன்கருதி காலங்கரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்.இதன் மூலம் விவசாயிகள் அரசு நிர்ணயிக்கும் ஆதார விலையில் தங்களது நெல்லை நேரடியாக விற்பனை செய்துபயன்பெறுவதுடன், இடைத்தரகர்களின் தலையீடும் குறையும். எனவே, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, காலங்கரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என ராஜகோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.

பணிபுரியும் மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்களை பதிவு செய்திடுக!

நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தல் திருநெல்வேலி, செப்.25– நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவுது:நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளை தமிழ்நாடு விடுதிகள்மற்றும் இல்லங்கள் சட்டம் - 2014-இன் கீழ் பதிவு செய்து சான்றிதழ் பெறவும், முதியோர் இல்லங்கள் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம்-2007-ன் கீழ் பதிவு செய்ய e-govஎன்ற முறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ​அனுமதி பெறாத விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உரிய அனுமதி பெறுவதற்கு e-gov மூலம் உரிய ஆவணங்களுடன் 31.10.2026-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ​தவறும் பட்சத்தில்உரிமையாளர்கள் மீது மேற்கொண்டும் சட்டங்களின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ​மேலும், தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மணிமுத்தாறு வளாக முதல் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்கல்வி உதவித்தொகை பெற அக்.21- க்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி, செப்.24-அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ்பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (மி.பி.வ) மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASASVI Post Matric ScholarshipScheme) மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

எவ்வித வருமான நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பாலிடெக்னிக், இளங்கலை தொழிற்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்பத்தின் ஆண்டுவருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2026-27ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் University Management Information System (UMIS) இணையதளம் மூலம் பெறப்படுகின்றன.

தகுதியுள்ள மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கான ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி, 21.10.2026 வரை UMIS இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக

நேரங்களில் அணுகி தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சி 55 ஆவது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு மாமன்றக் கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் புகார்

திருநெல்வேலி, செப்.25-நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினரும் 55வது வார்டு மாமன்ற உறுப்பினருமான முத்துசுப்பிரமணியன் பேசியதாவது: 55 ஆவது வார்டில் கடந்த 20 தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருந்து தற்போது கொஞ்சம் சீரமைந்து வருகிறது. இருந்த போதிலும் இதை சரியான முறையில் கண்காணிக்க அதிகாரிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும் .குடிநீர் திட்டம் மூலமாக அனைத்து சாலைகளும் சேதம் அடைந்துள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஜான்சன் நகர் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை.அதிக சொத்து வரி திட்டமான ஏ டைப் வரியை குறைத்து பி டைப் மாற்ற வேண்டும். தண்ணீர் திறக்கும் ஊழியர்களின் சம்பளம் மிக மிகக் குறைவு .மாதம் ஒன்பதாயிரம் ஒரு நாள் 300 ரூபாய். அவர்கள் தண்ணீர் திறப்பதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு தினந்தோறும் 150 ரூபாய் பெட்ரோல் போட வேண்டியுள்ளது இப்படி மீதி உள்ள 150 ரூபாயை வைத்து எப்படி உயிர் வாழ்வார்கள். இதையும் மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப் பணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார்.

குற்றாலம் குடிநீர் இணைப்பு நிறுத்தப்படாது தென்காசி நகர்மன்ற தலைவர் விளக்கம்

தென்காசி, செப். 25-தென்காசி நகராட்சி 31-வது வார்டு சிந்தாமணி பகுதியில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்படுவதால்,அப்பகுதியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குற்றாலம் குடிநீர் இணைப்பு நிறுத்தப்படாது என்று தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தெரிவித்துஉள்ளார்.

தென்காசி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாமிரபரணி குடிநீர் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டில் ரூ.69.45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 7 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், 6 தொட்டிகளின் பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், 31-வது வார்டு சிந்தாமணி பகுதியில் அமையவுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி தொடர்பாக பொதுமக்களிடையே நிலவும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது.சிந்தாமணி பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்படுவதால், அப்பகுதியில் உள்ள குற்றாலம் குடிநீர் இணைப்பு எந்தவிதத்திலும் நிறுத்தப்படாது. இதுதொடர்பாக கடந்த 05.06.2026 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் மன்றப் பொருள் எண் 19-ன் கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

எனவே, சிலர் பரப்பும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்கள் மற்றும் வருங்கால தலைமுறையினரின் நலனை கருத்தில்கொண்டு, தாமிரபரணி குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.