தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

27 May 2026, 10:14 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

பக்ரீத் பண்டிகை: சிபிஎம் எம்எல்ஏ செல்லசுவாமி வாழ்த்து

நாகர்கோவில், மே 27- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோத ரர்களுக்கு ஆர் செல்ல சுவாமி எம் எல் ஏ வாழ்த்துக்கள் தெரிவித்தார். வாழ்த்து செய்தியில் , வியாழனன்று மே 28 இஸ்லா மிய சகோதரர்களின் சிறப்பு விழாவான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகை யை முன்னிட்டு அனை வரிடமும் சகோதரத்துவம் நிறைந்து அனைத்து வளங்க ளும் நிறைவுடன் பெற்று மகிழ்வுடன் வாழ எனது அன்பான பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன் என்று கூறியுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 27- நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் 3-வது வார்டு காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநக ராட்சியின்‌ பொறுப்பு மேயராக மேரிபிரின்சி லதா பொறுப் பேற்ற பிறகு முதல் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்த தாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி 3வது வார்டு பெண் காங்கிரஸ் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொட்டாரம் அருகே பைக் மோதி பள்ளி மாணவி பலி

நாகர்கோவில், மே 27- கொட்டாரம் அருகே மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வர் சிவ சந்தியா (18). இவர் கொட்டாரம் அரசு பள்ளி யில் +2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் மகாராஜபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சிவசந்தியா மீது பயங்கர மாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரி ழந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர்தர சுற்றுலா கட்டமைப்பினை உருவாக்க அமைச்சர் ஆலோசனை

நாகர்கோவில், மே 27- தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட ரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் மே 27 அன்று நடை பெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறையின் பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அடுத்த 5 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டினை உயர்த்து வது, உயர்தர சுற்றுலா கட்டமைப்பினை உருவாக்குதல், புதிய வகை சுற்றுலா அனுபவங்களை வடிவமைத்து செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் முன்னெடுத்தல், புதிய, முழுமையான சுற்றுலா அனுபவத்திற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், தொழிலா ளர் பயிற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு கள் மூலம் சுற்றுலா நிர்வாகத்தின் திறனை உயர்த்துதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் சீ. ஸ்வர்ணா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் சி. லட்சுமி பிரியா, சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் பழைய குற்றாலம் கார் பார்க்கிங் ரூ. 31,13,550-க்கு ஏலம்

தென்காசி, மே 27- தென்காசி மாவட்டம், ஆயிரப் பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் கார் பார்க்கிங் ஏலம் செவ்வா யன்று ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலை யாண்டி தலைமையில் நடைபெற்றது. தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் வாகன நிறுத்த கட்டண வசூல் உரிமம் மற்றும் சாலையோரக் குத்தகை ஏலம் 2026-2027ஆம் ஆண்டிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல்கிஷோர் உத்தரவுபடி 26.05.2026 அன்று காலை 11.30 மணியளவில் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஏலம் நடை பெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரால் நிய மனம் செய்யப்பட்ட தென்காசி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சி தணிக்கை) தெற்குபகுதி முன்னிலையில் நடை பெற்ற இந்த ஏலம் விடும் நிகழ்ச்சியில் ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.ரேகா, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ்.பட்டமுத்து, எஸ்.முத்து லெட்சுமி, எம்.இசக்கி பாண்டி, கே.முருகசெல்வி, எஸ்.முகமது இப்ராஹிம், ஆகி யோர் கலந்து கொண்டனர். பழைய குற்றால வாகன நுழைவு கட்டண வசூல் உரிமம் - ஆரம்ப ஏலத்தொகை ரூ.31,13,550-என்று அறிவிக்கப் பட்டது அதனைத் தொடர்ந்து ரூபாய் பத்து லட்சத்திற் கான டிடி கட்டியவர்கள் ஏலம் கேட்டனர். அதில் அதிக பட்ச தொகையாக ரூபாய் 31,90,000 என்று ஏலம் மற்றும் டெண்டர் மூலம் கேட்ட சு.செல்வக்குமார் என்பவருக்கு ஏலம் விடப்பட்டது.

தீக்கதிர் செய்தி எதிரொலி: இராஜபாளையம் நூலகத்தில் மாவட்ட நூலகர் ஆய்வு

இராஜபாளையம், மே 27- இராஜபாளையம் அரசு நூலக செயல்பாடுகள், கட்டிடத்தின் உறுதித்தன்மை ,சுகாதாரம் சம்பந்தமாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக விருதுநகர் மாவட்ட அரசு நூலகர் புதன்கிழமையன்று இராஜபாளையம் அரசு அலுவலகத்தை ஆய்வு செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுப்ரமணியன் இமுருகானந்தம் ஆகியோர் மாவட்ட நூலகரிடம் நூலகம் குறித்துப் பேசினர். பின்னர் மாவட்ட நூலகர், விரைவில் நூலக குறைபாடுகள் சரிசெய்யப்படும் சுகாதாரம் முறையாக பேணப்படும் என்று உறுதிபட கூறினார்.

ஜுன் 1: சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கும் முகாம் நெல்லை ஆட்சியர் சுகுமார் தகவல்

திருநெல்வேலி, மே 27- நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம். நெல்லை கிளை நடுத்தர அலுவலகத்தில் சிறு-குறு மற்றும் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற ஜூன் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள்: அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.1.50 கோடி மற்றும் இதர 9 மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்க ளுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். திட்ட கடனுக்கு 3 சதவிகிதம் பெற்றுத்தரப்படும். நவீன ஆலை மற்றும் நவீன எந்திரங்கள் விரிவாக்கத்திற்கு 5 சதவிகித வட்டி பெற்று வட்டி மானியம் தரப்படும். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 35 சதவிகிதம் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும் 6 சதவிகிதம் வட்டி மானியம் பெற்றுத் தரப்படும். சமர்பிக்கப்படும் அனைத்து கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 100 சதவிகிதம் சலுகை உள்ளது. இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்,தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து ஆய்வு கட்டண தள்ளு படியை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

கால்நடைகளின் விபரங்களை அறிய தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் அறிமுகம்

தென்காசி, மே. 27- தென்காசி மாவட்டத்திலுள்ள 1.47,990 கால்நடை களுக்கும் 12 இலக்க காதுகுறி எண் பதிவு செய்து அதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதி வேற்றம் செய்து வைத்திட தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் வகுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள கால்நடைகளின் செயற்கை முறை கருவூட்டல், கால்நடை காப்பீட்டு விவரம், சினையுறு சதவிகிதம், கன்று ஈன்ற விவரம், உரிமை யாளர் பதிவு மற்றும் பெயர் மாற்றம், பருவத்திற்கேற்ப மேற்கொள்ளப்படும் கோமாரி நோய், தோல் கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றிற்கான தடுப்பூசி பதிவுகள், நோய்கிளர்ச்சி அறிக்கை, பால் உற்பத்தி பதிவு விவரங்கள் ஆகிய தரவுகள் சேகரிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய இயக்கம் வழி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தரவுகளை பதிவேற்றம் செய்யும் பொழுது உரிமையாளரின் கைப்பேசி எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவசாயியின் கைப்பேசிக்கு வெளிப்படும் கடவுச்சொல் மூலம் கால்நடைகளின் முழு விபரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கால்நடைகள் கொள்முதல், கால்நடைகள் விற்பனை ஆகியவை மேற்கொள்ளப்படும் பொழுது கால்நடைகள் பற்றிய முழு விபரமும் கால்நடை வளர்ப்போர் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட பணி தொடர்பாக கிராமங்க ளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையினர் வருகை தரும்பொழுது கால்நடை வளர்ப்போர் தங்களுக்கு வரும் கடவுச்சொல்லை பகிருமாறும், கேட்கப்படும் விபரங்களை தெளிவாக கூறிடுமாறும் தென்காசி மாவட்ட கால்நடை வளர்ப்போர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்க நுண்ணீர் பாசனத் திட்டம்

தென்காசி, மே 27- தென்காசி மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் ஆண்டுதோறும் பயிர் செய்யப்பட்டு வருகிறது. குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்வதற்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தினை செயல்படுத்து வதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் பயன்பாட்டுத்திறன் 40 முதல் 60 சத விகிதம் வரை அதிகரிக்கிறது. மகசூல் 30 முதல் 40சதவிகி தம் வரையும் அதிகரிக்கலாம். நீரில் கரையக்கூடிய உரங்களை நுண்ணீர் பாசன வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்துவதால் உரப் பயன்பாட்டினை 40சதவிகிதம் வரை அதிகரிக்க இயலும். பாசன நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதால் உரங்களும் வீணாகாமல் தேவைக்கேற்றாற் போல் பயன்படுத்தப்படுகிறது. களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தபடுவதால் பண்ணையாட்கள் கூலிச்செலவினை குறைக்க முடியும். நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன அமைப்புகள் உள்ளன. தென்காசி மாவட்டத்திற்கு நடப்பாண்டில் 1620 ஹெக்டர் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு பெறப்பட்டு உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75சதவிகித மானியத்திலும் வழங்கப்படுகிறது. ஒருமுறை மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தால் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலத்தில் மானி யத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயன்பெறலாம். தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்த விவசாயிகள் 3 ஆண்டுகளுக்கு பின் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2, நில வரைபடம் மற்றும் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது MIMIS வலைதளத்தின் மூலமாக நேரடியாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.