தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​திருநெல்வேலி விரைவு செய்திகள்

12 Jul 2026, 11:51 pm
​​​​​​​திருநெல்வேலி  விரைவு செய்திகள்

அருமனை அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்

அருமனை, ஜூலை 12- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புலியூர் சாலை ஊராட்சிக்கு உட்பட்ட தேவி கோடு பகுதியே சேர்ந்தவர் ஸ்ரீகலா (55) .இவர் மனம் நலம் பாதிக்கப் பட்டு நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் சகோதரியான சந்திரிகா தங்கி உள்ளார். சந்திரிகா வெள்ளிக்கிழமை மாலை நித்திரவிளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு சனிக்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது கூரை முழுவதும் தீப்பற்றி எரிவதை பார்த்து சத்தம் போட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சிகள் மேற் கொண்டனர். ஆனால் தீ அதிவேகமாக எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப் பட்டது. மேலும் தீ பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டப்பாறையில் 5 நாட்களாக சிறுத்தை நடமாட்டம்

வனத்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் சின்னாளப்பட்டி, ஜூலை 12- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மட்டப் பாறை பகுதியில் கடந்த 5 நாட்களாக சிறுத்தை சுற்றித் திரி வதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தாதம்பட்டி மற்றும் மட்டப்பாறை கண்மாய் பகுதி களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்த தையடுத்து வனத்துறையினர் டிரோன் மூலம் தேடுதல் நடத்தினர். ஆனால் சிறுத்தை சிக்காததால், மீண்டும் தென் பட்டால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அறி வுறுத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருண்குமார் என்பவர் தனது தோட்டத் தில் சிறுத்தையை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்ததாக வும், அந்த புகைப்படத்தில் சிறுத்தை மிகவும் மெலிந்த நிலையில் காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் காசிமாயன் கூறுகையில், “கடந்த 5 நாட்க ளாக தகவல் அளித்தும் வனத்துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

குடிநீர் டெண்டர் முறைகேடு புகார்: முதல்வருக்கு கவுன்சிலர் மனு

திருவில்லிபுத்தூர், ஜூலை 12- திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குடிநீர் விநியோக டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 61-வது தீர்மா னத்தை ரத்து செய்ய வேண்டும் என 7-வது வார்டு கவுன்சிலர் ராஜா மான்சிங் முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்ற சாதா ரண கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பான 61-வது தீர்மானத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி, அதை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, முதல்வர், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், நகராட்சி கள் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில், குடிநீர் விநியோக டெண்டரில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 61-வது தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

இராஜபாளையம், ஜூலை 12 - இராஜபாளையம் அருகே தண்ணீர் ஏற்றி சென்ற டிராக் டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிராஜ் (45), சொந்த டிராக்டரில் விவசாய நிலங்கள் மற்றும் கட்டு மானப் பணிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தார். எஸ். ராமலிங்கபுரத்தில் தண்ணீர் விநியோகம் செய்து விட்டு ஊருக்கு திரும்பியபோது, வளைவில் டிராக்டரை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் மாரிராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கீழ ராஜ குலராமன் போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோத னைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாரிராஜுக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே பிடிபட்ட கஞ்சா: சிறார் உட்பட 2 பேர் கைது

தேனி, ஜூலை 12- தேனி அருகே அன்னஞ்சி பகுதியில் காவல்துறை யினர் நடத்திய சோதனையில் 1.300 கிலோ கஞ்சா சிக்கி யது. இதுதொடர்பாக சிறார் உட்பட 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, அன் னஞ்சி பகுதியில் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த இருவரை சோதனை செய்தனர். அப்போது கட்டைப்பை யில் 1.300 கிலோ கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் கம்பம் மெட்டு காலனி கோவில் வாசல் தெருவைச் சேர்ந்த பலகுரு (21), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறார் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விதிமுறைகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து

விருதுநகர், ஜூலை 12- விருதுநகர் மாவட்டத் தில் விதிமுறைகளை மீறி உற்பத்தியில் ஈடுபட்ட 12 பட்டாசு ஆலைகளின் உரி மத்தை தற்காலிகமாக ரத்து செய்து அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத் தின் பிரதான தொழிலாக இருப்பது பட்டாசுத் தொழில். இங்குள்ள சுமார் 1200 பட் டாசு ஆலைகள் சுமார் 5 லட் சம் தொழிலாளர்கள் நேரடி யாகவும், 3 லட்சம் பேர் மறை முகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதேவேளை விதிமுறை மீறல் காரணமாக பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற் படுவதும், அதில் மனித உயிர் கள் பலியாவதும் தொடர்கி றது. இந்நிலையில் வெடி விபத்துகளைத் தடுக்க பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் உள்ளதா என தொழிலக பாதுகாப்பு, சுகா தார இயக்ககத்தின் சார்பில் 6 குழுக்கள் மாவட்டம் முழு வதும் உள்ள பட்டாசு ஆலை களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றன. கடந்த 30 நாட்களில் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்தனர். அதில், சிறிய அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 82 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளன. அதிக அளவி லான விதிமீறல்கள் கண்ட றியப்பட்ட 12 பட்டாசு ஆலை களின் உரிமம் தற்காலிக மாக ரத்து செய்தும் நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலை களில் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும், விதி மீறல்கள் கண்டறியப்பட் டால் உரிமம் ரத்து செய்யப் படும் எனவும் அரசு அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

ரூ.27.59 லட்சம் மோசடி தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது

விருதுநகர், ஜூலை 12 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் பெயரில் ரூ.27.59 லட்சம் மோசடி செய் ததாக தனியார் நிதி நிறு வன மேலாளர் ஒருவரை விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விருதுநகரில் செயல் பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய மதுரை மாவட் டம் தும்பக்குளத்தைச் சேர்ந்த பகவதி தெய்வம் (36), மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி, 65 பேரின் பெய ரில் போலியாக கடன் பெற்று ரூ.27.59 லட்சம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. நிறுவனத்திற்கு சந்தே கம் வராமல் இருக்க, கட னுக்கான வாராந்திர தவ ணைத் தொகையை அவரே சுமார் இரண்டு ஆண்டு செலுத்தி வந்ததாகவும், பின்னர் கடந்த மே மாதம் பணிக்கு வராததைத் தொட ர்ந்து நடைபெற்ற கணக்காய் வில் மோசடி வெளிச்சத் துக்கு வந்ததாகவும் போலீ சார் தெரிவித்தனர். நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், பகவதி தெய் வத்தை கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம் அருகே வாழைக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள் விவசாயிகள் கவலை - நிரந்தரவேலி அமைக்க கோரிக்கை

​ திருநெல்வேலி, ஜூலை 12- விக்கிரமசிங்கபுரம் ​அருகே காட்டுப் பன்றிகள் வாழை பயிர்களை சேதப் படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடி வார பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதி கரித்து வருகிறது. இவை நூற்றுக்கணக்கான வாழைக் கன்றுகளை சேதப்படுத் தியதால் விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். ​விக்கிரமசிங்கபுரம் அரு கேயுள்ள வேம்பையாபுரம், ஆலடியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். மலையடிவார பகுதி யான இங்கு, கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மலையை விட்டு வெளியே றும் காட்டுப் பன்றிகள் கூட்டமாக விளைநிலங்களுக் குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில சனிக்கிழமை அதிகாலை யில் வாழைத் தோட்டத்திற் குள் புகுந்த காட்டுப் பன்றி கள், அங்கு பயிரிடப்பட் டிருந்த இளம் வாழை கன்று களை வேரோடு பிடுங்கி சேதத்தை ஏற்படுத்தி யுள்ளன.​இதனால் நூற்றுக் கும் மேற்பட்ட வாழை கன்று கள் நாசமாகின. ​காட்டுப்பன்றிகளின் இந்த தொடர் அட்டகாசத் தால் தங்களின் வாழ்வா தாரம் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளதாக வேம்பை யாபுரம் பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக் கின்றனர். பன்றிகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க மலை யடிவாரத்தில் நிரந்தரவேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ்நாடு நாள் விழா“ ஜூலை 15-இல் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தென்காசி ஆட்சியர் தகவல் தென்காசி, ஜூலை 12 - தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின் படி, பேரறிஞர் அண்ணா தாய்த் தமிழ்நாட் டிற்கு “தமிழ்நாடு” என்ற பெயரைச் சூட்டிய ஜூலை 18 ஆம் நாள் ஆண்டுதோறும் “தமிழ் நாடு நாள் விழா”வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, தென்காசி மாவட் டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜுலை 15 அன்று காலை 9.30 மணியளவில் தென் காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு: “தமிழ்நாடு நாள் – கருவானது முதல் உரு வானது வரை” என்பதாகும். பேச்சுப் போட்டிக் கான தலைப்புகள்: நான் விரும்பும் தமிழ் நாடு, அன்றைய மெட்ராஸ் மாகாணம், இன்றைய நவீன தமிழ்நாடு, இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒவ்வொரு போட்டிக்கும் தலா ஒரு மாணவர் வீதம் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமை யாசிரியரின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று, போட்டி நடைபெறும் நாளன்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவி லான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு முதல் பரிசாக ரூ.10,000 இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற் கும் வாய்ப்பைப் பெறுவர். மாநில அளவி லான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2502521, 9677556672 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்புகொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.