திருநெல்வேலி விரைவு செய்திகள்
5 Nov 2026, 10:23 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

முதல்வர் பாதுகாப்பு பணிக்குச் சென்ற பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சார்பு ஆய்வாளர் கைது

திருநெல்வேலி, நவ.5-நெல்லை தாழையூத்தைச் சேர்ந்தவர் குமார்(49). இவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்புஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமையன்று ஈரோடு பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் விஜய்பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பணிக்காக நெல்லை மாநகர பகுதியில் இருந்துசென்ற ஆண் மற்றும் பெண் போலீசாருடன் சிறப்பு சார்பு ஆய்வாளர் சென்றுள்ளார். அன்றைய தினம் இரவில் காவல்துறையின் வேனில் மீண்டும் ஊருக்குதிரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேனில் தூங்கிக்கொண்டிருந்த பெண் காவலருக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். . இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவலர் நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம்நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது அறிவுறுத்தலின்பேரில் பெண் காவலர், பாளை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்போரில் போலீசார் பாலியல் சீண்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சார்புஆய்வாளர் குமாரை கைது செய்தனர்.

நெல்லை : பரவலாக மழை

திருநெல்வேலி,நவ.5-நெல்லை மாவட்டத்தில் வியாழனன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை மாலையில்திசையன்விளை மன்னார்புரம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழை பெய்தது. நெல்லை மாநகரில் வண்ணார் பேட்டை, புதியபேருந்து நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அருவிமற்றும் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

திருச்செந்தூரில் கனமழை

தூத்துக்குடி,நவ.5-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழனன்று காலைகனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழன் அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பரவலாகத்தொடங்கிய மழை, பின்னர் காலை 6 மணி முதல் 6.30மணி வரை கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. இந்த திடீர்கனமழையால் திருச்செந்தூர் டி.பி. ரோடு, சன்னதி தெரு, பேருந்து நிலைய வளாகம் மற்றும் சிவன் கோவில் தெருஉள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையோரங்களில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 ரவுடிகள் கைது

தூத்துக்குடி,நவ.5-தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் புதனன்று இரவு திரேஸ்புரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்நின்று கொண்டிருந்த 5 பேரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களிடம் வைத்திருந்த அரிவாள்,கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் திரேஸ்புரத்தைச் சேர்ந்த டேனியல் (28),மரிய அஜய் (20), மட்டக்கடையைச் சேர்ந்த மரிய அந்தோணி ஆக்னல் (26) மற்றும் கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்தமகேஷ் குமார் (45), சஞ்சய் (20) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் தூத்துக்குடியின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.