தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

29 May 2026, 10:53 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் அறிவிப்பு

வாங்க மானியம் அறிவிப்பு நாகர்கோவில், மே 29- தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள். ஆலிம்கள். அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா

தெரிவித்துள்ளார். கனிம வளங்கள் உடைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 2 டிராக்டர்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் மே 29 கொல்லஞ்சியில் கனிம வளங்களை உடைத்ததாக இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சியில் கிராம அதிகாரி சேகர் தனி வருவாய் ஆய்வாளர், இளநிலை உதவியாளர் ஆகியோர் இணைந்து சட்ட விரோதமாக கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது கொல்லஞ்சி பகுதியில் கனிம வளங்கள் உடைக்கப்படுவது தெரியவந்தது. திடீர் சோதனை செய்தபோது ஆட்கள் தப்பி ஓடி விட்டனர் இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது .இரண்டு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து அதிகாரி சேகர் கொடுத்த புகாரின் பேரில் நில உரிமையாளர், டிராக்டர் ஓட்டுநர்கள் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து

வருகின்றனர் இசக்கியம்மன் கோயில் வெள்ளி முக கவசம் திருட்டு

குழித்துறை, மே 29- தாணி மூடு இசக்கி அம்மன் கோயில் வெள்ளி முக கவசம் திருடப்பட்டுள்ளது உண்ணாமலைகடை அருகே தாணிமூடு இசக்கி அம்மன் கோயிலில் வெள்ளியிலான முக கவசத்தை கடந்த ஜனவரி மாதம் 18 ம் தேதி ஆபர்ண அறையில் வைத்துள்ளனர் இது ஒரு கிலோ எடை கொண்டது. ரூபாய் 50,000 மதிப்பாகும் மீண்டும் கடந்த 27ம் தேதி அம்மனுக்கு அணிவிப்பதற்காக ஆபரண அறையை திறந்து உள்ளனர் அப்பொழுது வெள்ளிவிலான முக கவசத்தை காணவில்லை. இதுகுறித்து கோயில் தலைவர் நாகப்பன் மார்த்தாண்டம் போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்ய அழைப்பு

மயிலாடுதுறை, மே 29 - மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டு அச்சங்கத்தில் இணைய விரும்புகிற அணிகள் இணையலாம் என கிரிக்கெட் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.கிருஷ்ணகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்ட புதிய கிரிக்கெட் சங்கமான “District Cricket Association of Mayiladuthurai”-இல் பதிவு செய்ய விரும்பும் கிளப் அணிகள் தங்களின் அணி பெயர், உரிமையாளர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல், உங்கள் ஊரின் பெயர் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்யலாம். பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dcaofmayiladuthurai@gmail.com. தொடர்புக்கு: 86104 49019. பதிவு செய்ய கால அவகாசம் 7.6.2026 வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்க கணியாகுளம்-புளியடி சாலையை மாநில நெடுஞ்சாலைக்கு மாற்றிடுக!

விதொச கோரிக்கை நாகர்கோவில், மே 29- நாகர்கோவில் நான்கு வழி சாலையில் இருந்து டவுன் ரயில் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைத்திட கனியாகுளம்-புளியடி சாலையை மாநில நெடுஞ்சாலைக்கு மாற்ற அ இவிதொச கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது, ஆலம்பாறை, கணியாகுளம் பகுதியில் உள்ள நான்கு வழி சாலையை கடந்து செங்குளம் சந்திப்பில் இருந்து கவின் தோப்பு வழியாக நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு இணைப்பு ஏற்படுத்த கணியாகுளத்திலிருந்து செல்லும் சாலை தற்போது கிராம சாலையாக உள்ளது. அதனை மாநில சாலையாக மாற்றி மாநில நெடுஞ்சாலை க்கு ஒப்படைப்பு செய்து இருவழி பாதையாக மாற்ற வேண்டும். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு செல்ல தற்போது வெட்டூர்ணிமடம் பகுதியில் இருந்து மட்டுமே பாதை உள்ளது. இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் பகுதியாகவே உள்ளது. இந்த டவுன் ரயில் நிலையத்தில் வடக்கு பக்கத்தில் வெறும் 500 மீட்டர் தொலைவில் நான்கு வழி பாதை செல்கிறது. இந்த நான்கு வழி பாதை கணியாகுளத்தில் இருந்து புலியடி செல்லும் சாலையை கடந்து தான் செல்கிறது. இந்த கிராம சாலையை மாநில நெடுஞ்சாலைக்கு மாற்றி கொடுத்தால் நான்கு வழிச்சாலையில் இருந்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ரயில் பயணிகள் விரைவாக ரயில் நிலையம் சென்றடைய முடியும். எனவே இந்த சாலையை மாநில நெடுஞ்சாலைக்கு மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜூன் 2, 3-இல் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு ரேஷன் பொருள் வழங்கல்

தென்காசி, மே 29- தென்காசி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 02.06.2026 மற்றும் 03.06.2026 ஆம் தேதிகளில் வீடு வீடாக சென்று விநி யோகம் செய்யப்பட உள்ளது. நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை இலவச மாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நேரடியாக சென்று வழங்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமான வர் திட்டத்தின் கீழ் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் பயனா ளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநி யோகம் செய்யப்பட உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களின் இல்லங்களுக்கே நேரில் வந்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையா ளர்களால் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் ஜூன் 1-30 வரை சிறப்பு தொழில் கடன் முகாம்

திருநெல்வேலி, மே 29 - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக திருநெல் வேலி கிளை அலுவலகத்தில் ஜூன் 1முதல் 30 வரை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது -தமிழ்நாடு தொழில் முத லீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு களுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற் கும், ஏற்கெனவே இயங்கிவரும் தொழிற்சாலைகளை விரிவு படுத்துவ தற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்து வதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்க ளின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. அதன்படி, எண். 5சி/5பி, சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் 2ஆவது மாடி, திருவனந்தபுரம் சாலை, வண்ணார் பேட்டை, திருநெல்வேலி-627003 என்ற முகவரியில் உள்ள அதன் திரு நெல்வேலி கிளை அலு வலகத்தில் சிறப்பு தொழில் கடன் முகாம் ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.அதில், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.1.50 கோடி மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனை வோர் மற் றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படும். தகுதியான தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முத லீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வழங் கப்படும். மேலும், புதிய தொழில்மு னைவோர் மற்றும் நிறுவன மேம் பாட்டு திட்ட கடனுக்கு 3 சதவீதம் வட்டி மானிய மும், நவீன ஆலை மற் றும் நவீன இயந்திரங்கள் விரி வாக்கத் திற்கு 5 சதவீத வட்டி மானியமும் பெற் றுத் தரப்படும். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 35 சதவீத முதலீட்டு மானியம் , 6 சதவீத வட்டி மானியம் ஆகியன பெற்றுத்தரப்படும். சமர்ப்பிக்கப்படும் அனைத்து கடன் விண்ணப்பங் களுக்கு ஆய்வு கட்ட ணத்தில் 100 சதவீதம் சலுகை உள்ளது. தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். 0462-2502038, 9444396830, 9444396881, 9445023459 ஆகிய தொலைத்தொடர்

பாபநாசத்திலிருந்து ஜூன் 1-இல் தண்ணீர் திறக்க முதல்வருக்கு நெல்லை எம்.பி., வேண்டுகோள்

திருநெல்வேலி, மே 29- கார் சாகுபடிக்காக பாபநாசம் அணை யிலிருந்து ஜூன்1ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை எம்.பி., ராபர்ட் புரூஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறி இருப்பதாவது- நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட் டமன்ற பகுதிகளில் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகி யான், நதியுண்ணி, கன்னடியன், நெல்லை, பாளையங் கால்வாய்களின் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையிலி ருந்து ஆண்டு தோறும் ஜூன் 1ஆம் தேதி தண் ணீர் திறப்பது வழக்கம். இந்த தண்ணீர் மூலம் அம்பாசமுத்திரம் சட் டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை மற்றும் பாளை தாலுகாவில் உள்ள ஆயிரக்கணக் கான ஏக்கர் விளைநி லங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஏராள மான விவசாய குடும் பங்கள் பயனடைவர்.கடந்த காலங்களில் அணையில் குறைந்த அளவு தண்ணீர் இருந்த போதிலும் கார் சாகுப டிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாய நிலங்கள் பயன் பெற்றன. தற்போது அணை யில் 44 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 1ஆம் தேதி பாபநாசம் அணையிலி ருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.