தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

5 Jun 2026, 10:58 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

திங்கட் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், ஜூன் 5- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் காலை 10.15 மணிக்கு மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்புரை குறைதீர் கூட்டம் நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறைகள் தொடர்பின புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம் எனவும், இந்த வாய்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது

அருமனை, ஜூன் 5- அருமனை அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த அரசால் தடை செய்யப்பட்ட 52 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப் பட்டது. குமரி மாவட்டம், அருமனை அருகே குஞ்சாலு விளை- பனச்சமூடு சாலையில் காவூர் கோணம் என்ற பகுதி யில் அருமனை உதவி ஆய்வாளர் சுஜின் மற்றும் சுனில் குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். அப்போது அந்த வாக னத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 52 பாக்கெட் கூலிப்பு என்ற புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரித்த போது அவர் தச்சூர் கோணம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அனீஸ் (32) என தெரிய வந்தது. இவர் விற்ப னைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அருமனை போலீசார் அனீஸ் மற்றும் வாகனம் பிடிக்கப்பட்ட புகையிலை பறிமுதல் செய்து அருமனைக் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அனீசை கைது செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஒ உள்பட இருவர் கைது

தென்காசி, ஜூன் - 05 திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியில் பைனான்ஸ் லைசென்ஸ் புதுப்பிக்க ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புரோக்கர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பாரதிதாசன் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மூக்காண்டி (46), பைனான்ஸ் ஆபீஸ் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது பைனான்ஸ் நிறுவன லைசென்ஸை புதுப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளார். இவரது லைசென்ஸை புதுப்பிக்க அனுமதி அளிப்பதற்கு சேரன் மகாதேவி கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மூக்காண்டி இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரி வித்துள்ளார். இதனையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை ஏடி.எஸ்.பி எஸ்கால் தலைமையிலான போலீசார் நேற்று காலை விஏஒ இதயக்கனியை கையும், களவு மாக பிடிக்க ரசாயனம் தடவிய பணத்தை மூக்காண்டி யிடம் கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து மறைந்திருந்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்துள்ளனர். அப்போது சேரன்மகா தேவி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து, விஏஒ இதயக்கனி, மூக்காண்டியிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை பெறும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு உதவியாக இருந்த சேரன்மகாதேவியைச் சேர்ந்த புரோக்கர் வெங்கடேஷ் (வயது 38) என்பவரை யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விதை ஆய்வு குழுவினர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர்/புதுக்கோட்டை, ஜுன் 5- தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுரைப்படி, தஞ்சாவூர், புதுக் கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணன் தலைமையில், விதை ஆய் வாளர்கள் மோகன்தாஸ், சிவக்குமார் உள்ளிட்ட குழுவி னர் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அம்மாபேட்டை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலை யங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், குறுவை பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் விலைப் பட்டியல், முளைப்பு அறிக்கைகள், பதிவு சான்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவை சரிபார்க்கப்பட்டன. விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை யாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தனியார் விதை விற்பனையாளர்கள் ரசீது இல்லா மல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.

பட்டாசு ஆலை தீ விபத்தில் தொழிலாளி படுகாயம்

சிவகாசி, ஜூன் 5- சிவகாசி அருகே பட்டாசுஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் அய்யனார் என்பவருக்கு சொந்தமான ஏபிஆர் பட்டாசு ஆலை உள்ளது. இதில் வெளியான பட்டாசு கழிவு களை வழக்கம் போல தீயிட்டு எரித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கழிவுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அச்சம்தவிழ்த்தானைச் சேர்ந்த கருப்பசாமி (55), என்ற தொழிலாளிக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை யளிக்கப்பட்டது. பின்பு, மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மல்லி காவல் நிலைய போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்திரம் பதிய லஞ்சம் கேட்டால் என்னிடம் சொல்லுங்கள்

பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கூறுகிறார் மதுரை, ஜூன் 5- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பத்திரப்பதிவு அலு வலகத்தில் வெள்ளிக்கிழமையன்-று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வாடிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அதி காரிகளிடம் லஞ்சம் வாங்கவும், கொடுக்கவும் கூடாது எனவும், பல்வேறு கோப்புகள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். வாடிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் வருவாய் வரக்கூடிய கிராமங்கள் எவை என்றும் கேட்டறிந்தார். பின்னர் வெளியே பத்திர பதிவு செய்ய வந்த பொது மக்களிடம் பத்திரம் பதிய யாரும் பணம் கேட்டார்களா? பயப்படாமல் சொல்லுங்கள் பிரச்சனை இருக்கா என கேட்டறிந்தார். லஞ்சம் யாரும் கேட்டாலும் என்னிடம் தெரி வியுங்கள் என்று அமைச்சர் நேரடியாக பொதுமக்களிடம் தெரிவித்து விட்டு காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.

அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: தேனி ஆட்சியர் அறிவிப்பு தேனி

,ஜூன்.5- பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ -மாண விகள் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.வைத்திநாதன் தெரி வித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசால் தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு பள்ளி விடுதிகள் 23 (மாணவர்களுக்கு-15, மாணவியர்க ளுக்கு-8) மற்றும் கல்லூரி விடுதிகள் 6 (மாணவர்களு க்கு-3, மாணவியர்களுக்கு-3)என மொத்தம் 29 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதியுடைய மாணt, மாணவியர் விண்ணப்பங்க ளை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினி களிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவ/மாணவியர்கள் 18.06.2026–க்குள்ளும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் 15.07.2026-க்குள்ளும் சம்மந்தப் பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ம்பம் மெட்டு சாலை பராமரிப்பு பணி ஜூன் 8 முதல் போக்குவரத்து மாற்றம் தேனி ஆட்சியர்அறிவிப்பு

தேனி, ஜூன் 5- கம்பம் -கம்பம் மெட்டு சாலைப்பகுதியில் கான்கீரிட் சாலை அமைத்தல் மற்றும் வடிகால் கட்டுதல் பணிகள் நடை பெற்று வருவதால் ஜூன் 8 ஆம் தேதி முதல்அனைத்து வாக னங்களும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில நெடுஞ்சாலையான கம்பம் - கம்பம்மெட்டு சாலை (SH-283) கி.மீ.9/0 - 12/8 வரை உள்ள சாலைப்பகுதி யில் கி.மீ.12/4-இல் சுமார் 65மீ நீளத்திற்கு மட்டும் திண்காரை அமைத்தல் மற்றும் சாலையின் இடதுபுறம் வடிகால் கட்டுதல் பணிகள் நடைபெற்று வருவதால்பொது மக்கள் பாதுகாப்பு கருதி 08.06.2026 (திங்கட்கிழமை) முதல் 07.07.2026 வரை போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படு கிறது. கம்பம் - கம்பம்மெட்டு சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் கூடலூர் - குமுளி – சக்குப்பள்ளம் - அனக்கற – புறட்டி - ராஜகண்டம் வழியாக கம்பம்மெட்டு செல்ல வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோவில் கட்டண முறைகேடு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி, ஜூன் 5- திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனக் கட்டண முறைக்கேடை அதிகாரிகள் கண்காணிக்கத் தவறியது குறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்வி களை எழுப்பி விளக்கமளிக்க உத்தர விட்டுள்ளது. புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கான 100 ரூபாய் விரைவு தரிசனக் கட்டணச் சீட்டு வழங்கும் நடைமுறையில், சுமார் 25 லட்சம் ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வெள்ளியன்ற விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்ததோடு பின்வரும் முக்கியக் கேள்விகளை எழுப்பி யுள்ளனர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100 ரூபாய் விரைவு தரிசனத்தில் 25 லட்சம் ரூபாய் அளவிற்கு இவ்வளவு பெரிய முறை கேடு நடக்கும் போது, அதனை ஆலை மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் கண்காணித்துத் தடுக்கத் தவறியது ஏன்? இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோவி லுக்கு நாள்தோறும் சராசரியாக எத்தனை பக்தர்கள் வருகை தருகின்றனர் என்ற துல்லியமான விபரத்தைக் கோவில் நிர்வா கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறைக்கேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கோவில் நிர்வாக மும், இந்து சமய அறநிலையத்துறையும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கீழூர், ஒட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.2.65 லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி, ஜூன் 5- தூத்துக்குடி கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோத னையில் ரூ.2.65 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பொது மக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களிடம் இருந்து அதிக அளவில் லஞ்சப் புகார்கள் வருவதாகத் தொடர்ந்து எழுந்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று தூத்துக்குடி கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் இறங்கினர். ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவல கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் பீட்டர் பால் துறை தலைமையிலான அதிகாரிகள் இன்று திடீர் சோதனையை மேற்கொண்டனர். அலுவல கத்தின் அனைத்து நுழைவு வாயில்களை யும் பூட்டி, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு கறாரான கட்டுப்பாடுகளை விதித்துப் போலீசார் இந்த விசாரணையை நடத்தினர். இச்சோதனையின் போது, ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் கிருபாகரனிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.15 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இத்தொகை குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கீழூரில் 6 மணி நேர விசாரணை இதேபோன்று, தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமை யிலான அதிகாரிகள் குழுவினர் வெள்ளி யன்று மதியம் 2:45 மணி முதல் தற்போ தைய இரவு நேரம் வரை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் அலுவலகத்திற்குள் வந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், அவரி டமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்து அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு பள்ளி: ஓபன் ஏர் ஹெட்போன் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!

திருவள்ளூர், ஜூன் 5- திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே சுமார் ரூ.5 கோடி மதிப்பில், தனியார் பள்ளிகளுக்கு நிகரான அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட புதிய நகராட்சி மேல்நிலைப்பள்ளி வியாழக் கிழமை (ஜூன் 4) திறக்கப்பட்டது. முன்னர் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே போதிய இடவசதியின்றி இயங்கி வந்த இப்பள்ளியில், 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது இடநெருக்கடிப் பிரச்சனைக்குத் தீர்வாக, புதிய கட்டி டத்தில் விசாலமான வகுப்பறைகள், டிஜிட்டல் போர்டு, டிஜிட்டல் லேப், ஆரோ குடிநீர் மற்றும் நவீன கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி திறப்பு விழாவில், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மாண வர்களுக்குப் பூங்கொத்து, சாக்லேட் மற்றும் பேனா வழங்கி பன்னீர் தெளித்து வரவேற்றார். இப்பள்ளியில், கடைசி பெஞ்ச் மாண வர்களுக்கும் ஆசிரியரின் குரல் தெளி வாகக் கேட்கும் வகையில், ஆசிரியர்கள் ‘ஓபன் ஏர் ஹெட்போன் வித் மைக்’ அணிந்து நவீன தொழில்நுட்பத்துடன் பாடம் நடத்தி னர். அரசுப் பள்ளியின் இந்த அதிரடி மாற்றம் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்ப ணிப்பு, குழந்தைகளைச் சேர்க்க வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆண்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு லாரிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய சிபிஎம் கோரிக்கை

தேனி ,ஜூன்.5- ஆண்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோ ரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் ஆண்டிபட்டி பொறுப்பு செய லாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம், ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், வைகை அணை வறண்ட நிலையில் ஆண்டி பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத் தில் குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலை உள் ளது.இதனால் பேரூராட்சி யில் குடியிருக்கும் பொது மக்கள் குடிநீரின்றி தவிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வீடுகள் ,உண வகங்கள் ,தேனீர் கடைகளு க்கு தேவையான குடிநீரை லாரிகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.